Skip to main content

"அதற்கான விலையை புதின் கொடுப்பார்": பைடன் பதில் - வெடித்த மோதல்!

Published on 18/03/2021 | Edited on 18/03/2021

 

JOE BIDEN- PUTIN

 

அமெரிக்காவில் கடந்த வருடம் அதிபர் தேர்தல் நடைபெற்றது. அத்தேர்தலில் டொனால்ட் ட்ரம்பை வீழ்த்தி ஜோ பைடன் அமெரிக்காவின் அதிபராக தேர்தெடுக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து ஜோ பைடன், கடந்த ஜனவரி 20ஆம் தேதி அமெரிக்க அதிபராக பதவியேற்றுக்கொண்டார். இந்நிலையில் சமீபத்தில் வெளியிடப்பட்ட அமெரிக்க உளவுத்துறையின் அறிக்கையில், ரஷ்ய அதிபர் புதின், ஜோ பைடனை தோற்கடிக்கும் விதமாக ட்ரம்பை ஜெயிக்க வைக்க முயன்றதாக கூறப்பட்டிருந்தது.

 

இந்தநிலையில் ஊடகம் ஒன்றிற்குப் பேட்டி அளித்த ஜோ பைடனிடம், இதுகுறித்து கேள்வியெழுப்பபட்டது. அதற்குப் பதிலளித்த ஜோ பைடன், “அதற்கான விலையை அவர் (புதின்) கொடுப்பார்” என தெரிவித்தார். மேலும், “எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னிக்கும், பிற அரசியல் எதிரிகளுக்கும் விஷம் தர உத்தரவிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள புதினை நீங்கள் கொலைகாரன் என நினைக்கிறீர்களா?” என கேள்வியெழுப்பப்பட, அதற்கு பைடன், “நான் அப்படி நினைக்கிறேன்” என பதிலளித்தார். 

 

அதே நேரத்தில் நவல்னிக்கு விஷம் தரப்பட்டதற்குத் தண்டனையாக ரஷ்யா மீது விதிக்கப்பட்ட ஏற்றுமதி கட்டுப்பாடுகளைக் கடுமையாக்குவதாக அமெரிக்க வர்த்தகத் துறை அறிவித்தது. இதனால் ஆத்திரமடைந்த ரஷ்யா, அமெரிக்காவிற்கான தனது தூதரை ஆலோசனைக்காக தலைநகர் மாஸ்கோவிற்கு அழைத்துள்ளது. அமெரிக்காவுடனான உறவில் அடுத்து என்ன செய்ய வேண்டும், எங்கு செல்ல வேண்டும் என ஆலோசிப்பதற்காக அவர் ரஷ்யா அழைக்கப்பட்டுள்ளதாக ரஷ்ய வெளிவுறவுத்துறை தெரிவித்துள்ளது.

 

இந்த விவகாரம் குறித்து பேசிய ரஷ்ய வெளிவுறவுத்துறையின் துணை அமைச்சர், “அமெரிக்கா - ரஷ்யா இடையேயான உறவு மேலும் பாதிப்பு அடைவதற்கு அவர்கள்தான் பொறுப்பு” என தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

“உக்ரைனுடனான போர் நிறுத்தத்திற்குத் தயார், ஆனால்...” - கண்டிஷன் போட்ட ரஷ்ய அதிபர்

Published on 14/06/2024 | Edited on 14/06/2024
Russian President Ready for a cease-fire with Ukraine

உக்ரைன் - ரஷ்யா இடையே, கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக போர் நீடித்து வருகிறது. இதில், உக்ரைனை நிலம், நீர் உள்ளிட்ட பகுதிகளில் சூழ்ந்து கொண்டு மீண்டும் ரஷ்யா தீவிர தாக்குதலைத் தொடுத்து வருகிறது. இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு நாடுகள் முயன்றும், போர் நின்றபாடில்லை. அதே வேளையில், உக்ரைனுக்கு அமெரிக்கா தொடர்ந்து போர் ஆயுதங்களை வழங்கி வருவதாக ரஷ்யா தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.

இதனிடையே, ரஷ்ய அதிபர் தேர்தலில் பெரும்பான்மை வாக்குகளுடன் விளாடிமிர் புதின், 5வது முறையாக அதிபராக கடந்த மே 7ஆம் தேதி பொறுப்பேற்றார். இந்த நிலையில், போர் நிறுத்தத்திற்கு உக்ரைனுடன் பேச்சுவார்த்தைக்கு ரஷ்யா தயாராக இருப்பதாக சர்வதேச  செய்தி நிறுவனங்கள் கூறியதாகக் கூறப்பட்டது. 

இந்த நிலையில் உக்ரைன் இதைச் செய்தால் போர் நிறுத்தத்திற்குத் தயாராக இருப்பதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் உரையாற்றிய விளாடிமிர் புதின் கூறியதாவது, “கெய்வ் பகுதி உள்ளிட்ட நான்கு ஆக்கிரமிக்கப்பட்ட உக்ரேனிய பிராந்தியங்களிலிருந்து துருப்புக்களை வாபஸ் பெற்றால், வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பில் சேரும் திட்டத்தைக் கைவிட்டால் உடனடியாக போர் நிறுத்தத்திற்கு உத்தரவிடத் தயார். நாங்கள் அதை உடனடியாக செய்வோம்” எனத் தெரிவித்துள்ளார்.

Next Story

‘அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மகன் குற்றவாளி’ - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

Published on 11/06/2024 | Edited on 11/06/2024
US President Joe Biden's son case related verdict

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மகன் குற்றவாளி என நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.

அமெரிக்காவின் 46 வது அதிபராக 2021 ஆம் ஆண்டு முதல் பதவி வகித்து வருபவர் ஜோ பைடன். இவரது மூத்த மகன் ஹண்டர் பைடன் கடந்த 2018 ஆம் ஆண்டு சட்டவிரோதமாக துப்பாக்கி வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் சட்டவிரோதமாக துப்பாக்கி வாங்கிய குற்றச்சாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மகன் ஹண்டர் பைடன் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. முன்னதாக இந்த வழக்கு தொடர்பாக ஜோ பைடன் கருத்து தெரிவிக்கையில், “எனது மகன் ஹண்டர் பைடன் குற்றவாளி என நீதிமன்றத்தால் உறுதிசெய்யப்பட்டால் அவரை மன்னிக்கப் போவதில்லை” என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.