Skip to main content

படமாகிறது ஹார்வே வெயின்ஸ்டீன் மீதான பாலியல் குற்றச்சாட்டு கதை

Published on 02/06/2018 | Edited on 02/06/2018

ஹார்வே வெயின்ஸ்டீன் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளை அடிப்படையாகக் கொண்டு, "திகில் படம்" ஒன்றை எடுக்க உள்ளதாக ஹாலிவுட் இயக்குனர் ப்ரியான் டி பல்மா கூறியுள்ளார். 1970களிலும் 80களிலும், திகில் படங்களான கேரி மற்றும் ஸ்கார்ஃபேஸ் ஆகியவற்றை இயக்கிய டி பல்மா, "இந்த சம்பவத்தை தொடர்ந்து கவனித்து வருவதாக" ஏ எஃப் பி செய்தி முகமையிடம் தெரிவித்தார்.

 

பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட ஹாலிவுட் முன்னாள் தயாரிப்பாளர் ஹார்வே வெயின்ஸ்டீன், கடந்த வாரம் நியூயார்க் போலீஸாரிடம் சரணடைந்தார். வெயின்ஸ்டீன் மீதான குற்றச்சாட்டுகளை, அவரது வழக்கறிஞர் மறுத்துள்ளார்.

 

movie

 

இதில் நிறைய பேர் ஈடுபட்டுள்ளனர் என்று எனக்கு தெரியும். கடந்த சில ஆண்டுகளில் நான் நிறைய கதைகளை கேள்விப்பட்டுள்ளேன்" என்று 77 வயதான டி பல்மா தெரிவித்துள்ளார். "நடிகர்களின் நம்பிக்கையையும் அன்பையும் இயக்குநர்கள் பெற வேண்டும். தங்களின் இச்சைக்காக அதனை மீறுவது, ஒருவர் செய்யக்கூடிய மோசமான காரியம்" என்றும் அவர் தெரிவித்தார். வெயின்ஸ்டீனால் பாலியல் துன்புறுத்தல் மற்றும் தாக்குதலுக்கு ஆளாகி உள்ளதாக, அவர் மீது பல பெண்கள் புகார் அளித்தனர்.

 

இந்நிலையில், பாலியல் வன்கொடுமை, குற்றவியல் பாலியல் கொடுமை, பாலியல் துஷ்பிரயோகம் போன்ற குற்றச்சாட்டுகளுக்காக கடந்த வாரம் வெயின்ஸ்டீன் கைது செய்யப்பட்டார். சட்டத்திற்கு புறம்பாக செக்ஸ் வைத்துக் கொண்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை வெயின்ஸ்டீன் மறுத்துள்ளார். பிரான்ஸ் நாட்டு தயாரிப்பாளருடன் கலந்தாலோசித்து தான் எடுக்கவிருக்கும் படத்தின் கதையானது, சினிமா துறையில் நடைபெறும் இவ்வாறான பாலியல் வன்கொடுமைகளை தடுக்கும் நோக்குடன் இருக்கும் என்று கூறினார். எனினும், தன் கதையின் கதாபாத்திரத்தின் பெயர் ஹார்வி வெயின்ஸ்டீன் அல்ல என்று அவர் தெரிவித்தார். "ஆனால், இது ஒரு திகில் படம். சினிமா துறையின் உள்ளேயே இந்த கதை நகரும்" என்று ஃபிரஞ்சு நாளிதழான லெ பரிசினிடம் டி பல்மா கூறினார்.

 

 

பாலியல் கொடுமை, குற்றவியல் பாலியல் சட்டத்தின் கீழ் வெயின்ஸ்டீன் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால், அவருக்கு 25 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளாதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அவரின் கைது, குற்றஞ்சாட்டிய பல்வேறு நபர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இது ஒரு "குறிப்பிடத்தக்க தருணம்" என நடிகை ரோஸ் மெக் கொவன் புகழ்ந்துள்ளார்.

சார்ந்த செய்திகள்

Next Story

சமந்தாவைத் தொடர்ந்து ஸ்ருதிஹாசனும் விலகல் - ரசிகர்கள் குழப்பம்

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
Following Samantha, Shruti Haasan also quit in chennai story

2021ஆம் ஆண்டு சமந்தா நடிப்பில் ஹாலிவுட் இயக்குநர் பிலிப் ஜான் இயக்கத்தில் சென்னை ஸ்டோரி என்ற தலைப்பில் ஒரு சர்வதேச படம் உருவாகுவதாக அறிவிப்பு வெளியானது. இப்படம் டிமேரி என் முராரி எழுத்தில் 2004ஆம் ஆண்டு வெளியான ‘தி அரேஞ்ச்மெண்ட்ஸ் ஆஃப் லவ்’ என்ற ரொமாண்டிக் காதல் நாவலைத் தழுவி எடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. 

இதன் படப்பிடிப்பு தொடங்கியிருந்த சூழலில் சமந்தா விலகினார். இதற்கு தசை அலர்ஜி பாதிப்பு காரணம் எனக் கூறப்பட்டது. இதையடுத்து ஸ்ருதிஹாசன் கமிட்டானார். மேலும் இங்கிலாந்தைச் சேர்ந்த விவேக் கல்ரா, கெவின் ஹார்ட், ஜான் ரெனோ உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க கமிட்டாகினர்.

Following Samantha, Shruti Haasan also quit in chennai story

சமீபத்தில் இதன் படப்பிடிப்பிலும் ஸ்ருதிஹாசன் கலந்து கொண்டார். இந்த நிலையில் ஸ்ருதிஹாசனும் தற்போது சென்னை ஸ்டோரி படத்திலிருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து இப்படத்தில் கமிட்டாகி வரும் நடிகைகள் விலகிவருவது ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.  

Next Story

தொடரும் மர்மம்; மூன்று மாதத்தில் நான்கு இளம் நடிகைகள் மரணம்!  

Published on 11/03/2024 | Edited on 11/03/2024
sophia leone passed away

ஆபாச படங்களில் நடித்து உலகம் முழுவதும் பிரபலமானவர் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் மாகாணத்தைச் சேர்ந்த சோபியா லியோன். 26 வயதான சோபியா லியோன், தனது 18வது வயதிலிருந்தே ஆபாச படங்களில் நடித்துவந்தார். இவர் அமெரிக்க மாடலிங் ஏஜென்ஸியான ‘101 மாடலிங் இங்க்’ நிறுவனத்தின் மூலம் அறிமுகமானா சில காலத்திலேயே பிக் ஸ்டாராக உருவெடுத்தார். படங்களில் நடிக்க தொடங்கிய 9 ஆண்டுகளில் அவரின் சொத்து மதிப்பு ஒரு பில்லியன் டாலராக உயர்ந்தது.

இந்த நிலையில், கடந்த 1 ஆம் தேதி நியூ மெக்சிகோவில் உள்ள அல்புகர்கி பகுதி அப்பார்ட்மெண்ட்டில் வசித்து வந்த சோபியா லியோனை அவரது குடும்பத்தினர் தொடர்புகொண்டனர். ஆனால் அவரை தொடர்பு கொள்ள முடியாததால் சந்தேகம் அடைந்த அவரது குடும்பத்தினர் உடனடியாக சோபியா லியோன் தங்கிருந்த இடத்திற்கு சென்று பார்த்துள்ளனர். அங்கு மயக்கநிலையில் கிடந்த சோபியா லியோனை பார்த்து அதிர்ச்சியந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், சோபியா லியோன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கடந்த 9 ஆம் தேதி நிதி திரட்டும் சமூக வலைதளமான ‘கோ ஃபன்ட் மீ’ வலைதளத்தில் சோபியா லியோன் வாளர்ப்பு தந்தை மைக் ரொமேரோ, “சோபியாவின் இறந்த செய்தியை நான் ஒரு கனத்த இதயத்துடன் பகிர்ந்து கொள்கிறேன். அவரின் இழப்பு எங்களுக்கும், அவரின் ரசிகர்களுக்கும் பேரிழப்பு..'' என பதிவிட்டுள்ளார். மேலும் அவரது இறுதி சடங்கிற்கு நிதி திரட்டும் அறிவிப்பையும் வெளியிட்டார். முதலில், சோபியாவின் இறுதி சடங்கிற்கு 12,000 டாலராக இலக்கு தொகை நிர்ணயிக்கப்பட்ட நிலையில், கூடுதலாக 5,725 டாலர் சேர்த்து உயர்த்தப்பட்டது. 

இதனிடையே, நடிகையின் மரணம் குறித்து பேசிய அதிகாரி ஒருவர், “Albuquerque homicide detectives மூலம் நடிகையின் மரணம் பற்றி விசாரணை நடத்தி வருவதாகவும், நடிகை மரணத்தில் மர்மம் இருப்பதாகவும்” அந்நாட்டு ஊடகங்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். குடும்பத்தினர் தரப்பிலும் சோபியா லியோனின் மரணம் தற்கொலை இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. நடிகை இறப்பு செய்தி வெளியானதில் இருந்து அவருக்கு ரசிகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவர் கடைசியாக கொடுத்த பேட்டி மற்றும் நடித்த படங்கள் குறித்து சமூக வலைத்தளங்களில் வைரல் செய்யப்பட்டு வருகிறது. இதனிடையே ரசிகர்கள் சிலர் சமூக வலைத்தளங்களில் சோபியாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், தீர விசாரணை செய்து உண்மையை கண்டுபிடிக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர்.

கடந்த 3 மாதங்களில் கேக்னே லின் தாய்னா ஃபீல்ட்ஸ்(24), கார்ட்டர்(36), ஜெஸ்ஸி ஜேன்(43) ஆகிய  மூன்று ஆபாச பட நடிகைகள் அடுத்தடுத்து மரணம் அடைந்த நிலையில், தற்போது 4ஆவதாக சோபியா லியோன் உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில், தைனா ஃபீல்ட்ஸ் முன்னதாக ஆபாச திரைப்படத் துறையில் பாலியல் அத்துமீறல் நடப்பதாக குற்றச்சாட்டுகளை முன்வைத்து அதிர்வலைகளை எழுப்பி இருந்தார். அதன் பிறகே அவர் மர்மமான முறையில் மரணம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்கள் மூன்று பேரின் மரணத்திலும் சந்தேகம் இருப்பதாக ரசிகர்கள் குற்றம் சாட்டி வந்த நிலையில், தற்போது நடிகை சோபி லியோன் மரணம் அடைந்திருப்பது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.