இலங்கை தலைநகர் கொழும்புவில் நேற்று 3 கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் 4 ஓட்டல்கள் குடியிருப்பு வளாகம் என 8 இடங்களில் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களில் பலியானோர் எண்ணிக்கை இன்று காலை நிலவரப்படி 290 என அறிவிக்கப்பட்டுள்ளது. குண்டுவெடிப்பில் காயமடைந்த 500 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="7632822833" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
இதனை தொடர்ந்து கொழும்பு விமானநிலையத்தில் அருகே வெடிக்காத குண்டு ஒன்று இன்று காலை கண்டுபிடிக்கப்பட்டது. இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக 24 கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று நள்ளிரவு முதல் இலங்கையில் அவசரநிலை அமல்படுத்தப்பட உள்ளதாக அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறிசேனா அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.