இலங்கை அதிபர் தேர்தலில் பொதுஜன பெரமுனா கட்சியின் கோத்தபய ராஜபக்சே வெற்றி பெற்றுள்ளார் என்று அந்நாட்டின் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

SRILANKA PRESIDENTIAL ELECTION WIN FOR GOTAPAYA RAJAPAKSE

இலங்கையில் 8- வது அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நேற்று (16/11/2019) நடந்தது. இதில் சுமார் 81.52% வாக்குகள் பதிவாகின. அதை தொடர்ந்து வாக்கு எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. அதிபர் தேர்தலில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த 35 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

SRILANKA PRESIDENTIAL ELECTION WIN FOR GOTAPAYA RAJAPAKSE

Advertisment

Advertisment

இந்நிலையில் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளது. அதில் பொதுஜன பெரமுனா கட்சியின் கோத்தபய ராஜபக்சே 6,924,255 வாக்குகள் (52.25%) பெற்று வெற்றி பெற்றதாக, அந்நாட்டின் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இவரை எதிர்த்து போட்டியிட்ட பிரதான கட்சியான புதிய ஜனநாயக முன்னணி வேட்பாளர் சஜித் பிரேமதாச 5,564,239 வாக்குகள் (41.99%) பெற்று தோல்வி அடைந்தார்.

தேர்தல் முடிவை அடுத்து இலங்கை நாட்டின் 8- வது அதிபராக கோத்தபய ராஜபக்சே, நாளை (18/11/2019) பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.