Skip to main content

விண்வெளி ஹோட்டல்

Published on 07/04/2018 | Edited on 07/04/2018

ஒரே நாளில் 16 முறை சூரிய உதயத்தையும் சூரிய மறைவையும் பார்க்க வேண்டுமா? ஜீரோ கிராவிட்டியில் விண்வெளியில் நீந்த வேண்டுமா? இந்த ஆசையெல்லம் இருந்தால் இன்னும் ஒரு நான்கு வருடம் மற்றும் 9.5 மில்லியன் டாலருடன்  (இந்தியா ரூபாயில் 61 கோடி)  காத்திருங்கள் வரப்போகிறது விண்வெளி உயத்தர ஹோட்டல். 

கலிபோர்னியாவின் சான்  ஜோஸ்சிலுள்ள அரோரா ஸ்டேஷன் அமைப்பு இந்த விண்வெளி ஹோட்டல் பற்றிய  தகவலை கடந்த வியாழக்கிழமை அன்று தெரிவித்துள்ளது.

 

space hotel

 

இந்த விண்வெளி ஹோட்டலானது யுஎஸ்ஸை சேர்ந்த விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ஒரியன் ஸ்பான் உருவாக்க முனைந்துள்ளது.

ஆறு பேர்கள் ஒரே நேரத்தில் விண்வெளி சென்று முழுதாக 12 நாட்கள் தங்கி விடுமுறை நாட்களை சிறப்பிக்கும் அளவிற்கு பொழுதுபோக்கு அம்சங்களை கொண்டவகையில் அமைக்கயிருப்பதாகவும். 2022ஆம் ஆண்டில் முதல் விருந்தினருக்கான வரவேற்பை தொடங்க திட்டமிட்டுள்ளதாகவும் ஓரியன் ஸ்பான் நிறுவனம் கூறியுள்ளது.

 

space hotel

 

மேலும் இந்த விண்வெளி ஹோட்டலுக்கு விருந்தாளியாக வரவிருப்பவர்ளுக்கு மூன்று மாத பயிற்சியும் முன்னதாவே அளிக்கப்படும். பூமியிலிருந்து சுமார் 200 மைலில் புவியின் சுற்றுவட்ட பாதையில் அமையவிருக்கும் இந்த ஹோட்டலில் இருந்து  பூமியின்  நீலநிற தோற்றத்தையும் 24 மணி நேரத்தில் 16 முறை  சூரிய உதயம் மற்றும் அஸ்த்தமனத்தை உயர்தர விருந்தகத்திலிருந்து பார்க்கும் வாய்ப்பை பெறுவர் எனவும் கூறியுள்ளது.

மேலும் ஓரியன் ஸ்பான் நிறுவனத்தின் செயல்தலைவர் பங்கர் "எங்களுடைய கொள்கையானது மக்களுக்கு விண்வெளி பயணத்தை எளிதாக்குவதுதான்'' எனக்கூறினார்.   

 

     

சார்ந்த செய்திகள்

 

Next Story

விண்வெளி மையத்திற்கு சுனிதா வில்லியம்ஸ் பயணம்!

Published on 05/06/2024 | Edited on 05/06/2024
Sunita Williams Travel to Space Center

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து ‘அட்லஸ் - வி’ என்ற ராக்கெட் மூலம் இந்திய நேரப்படி கடந்த மாதம் 7 ஆம் தேதி (07.05.2024) காலை 08.04 மணிக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அமெரிக்க கடற்படையைச் சேர்ந்த கேப்டன் விச் வில்மோர் ஆகியோர் சர்வதேச விண்வெளி மையத்திற்குப் பயணத்தை மேற்கொள்ள இருந்தனர். இதன் மூலம் சுனிதா வில்லியம்ஸ் மூன்றாவது முறையாக விண்வெளி பயணத்தை மேற்கொள்ள இருந்தார்.

இத்தகையச் சூழலில் இவர்கள் இருவரும் பயணிக்க இருந்த போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தின் பயணம் புறப்படுவதற்கு முன்னர் கடைசி நேரத்தில் (அதாவது 30 நிமிடத்திற்கு முன்னதாக) தொழில்நுட்ப சிக்கல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. ஆக்சிஜன் குழாயில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நேற்றைய பயணம் ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து இந்தப் பயணம் கடந்த மாதம் 8 ஆம் தேதி (08.05.2024) காலை 07.40 மணிக்குச் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதனைத்தொடர்ந்து சுனிதா வில்லியம்ஸின் விண்வெளி பயணம் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது. போயிங் ஸ்டார்லைனர் திட்டத்தின் அடலஸ் - வி ராக்கெட்டின் ஆக்சிஜன் குழாய் புதிதாக மாற்றப்பட்ட பிறகு மே 17 ஆம் தேதி சுனிதா வில்லியம்ஸ் விண்வெளிக்குச் செல்கிறார் என நாசா சார்பில் அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் இந்தப் பயணமானது பல்வேறு காரணங்களால் மூன்று முறை ஒத்திவைக்கப்பட்டிருந்தது. 

Sunita Williams Travel to Space Center

இந்நிலையில் சுனிதா வில்லியம்ஸ் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இவருடன் புட்ச் வில்மோரும் பயணம் செய்கிறார். இதன் மூலம் மூன்று முறை ஒத்திவைக்கப்பட்ட சுனிதா வில்லியம்ஸின் சர்வதேச விண்வெளி ஆய்வு மைய பயணமானது இந்திய நேரப்படி இன்று (05.06.2024) இரவு 08.17 மணியளவில் நிறைவேறி உள்ளது. 

Next Story

சுனிதா வில்லியம்ஸின் விண்வெளி பயணம் மீண்டும் ஒத்திவைப்பு!

Published on 08/05/2024 | Edited on 08/05/2024
Sunita Williams space flight postponed again

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து ‘அட்லஸ் - 5’ என்ற ராக்கெட் மூலம் இந்திய நேரப்படி நேற்று (07.05.2024) காலை 08.04 மணிக்கு இந்திய வம்சாவளியை சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அமெரிக்க கடற்படையைச் சேர்ந்த கேப்டம் விச் வில்மோர் ஆகியோர் சர்வதேச விண்வெளி மையத்திற்குப் பயணத்தை மேற்கொள்ள இருந்தனர். இதன் மூலம் சுனிதா வில்லியம்ஸ் மூன்றாவது முறையாக விண்வெளி பயணத்தை மேற்கொள்ள இருந்தார்.

இத்தகையச் சூழலில் இவர்கள் இருவரும் பயணிக்க இருந்த போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தின் பயணம் புறப்படுவதற்கு முன்னர் கடைசி நேரத்தில் (அதாவது 30 நிமிடத்திற்கு முன்னதாக) தொழில்நுட்ப சிக்கல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. ஆக்சிஜன் குழாயில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நேற்றைய பயணம் ஒத்திவைக்கபட்டிருந்தது. இதனையடுத்து இந்த பயணம் இன்று (08.05.2024) காலை 07.40 மணிக்குச் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் சுனிதா வில்லியம்ஸின் விண்வெளி பயணம் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. போயிங் ஸ்டார்லைனர் திட்டத்தின் அடலஸ் - 5 ராக்கெட்டின் ஆக்சிஜன் குழாய் புதிதாக மாற்றப்பட்ட பிறகு மே 17 ஆம் தேதி சுனிதா வில்லியம்ஸ் விண்வெளிக்குச் செல்கிறார் என நாசா சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.