கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவி சோபி க்ரிகோய்ர் கரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளார்.

sophie gregoire trudeau recovered from corona

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

உலகளவில் கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,21,412 ஆக உயர்ந்துள்ளது. மேலும், உலகளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 1,51,004 பேர் குணமடைந்துள்ளனர், 33,000க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். பிரிட்டன் இளவரசர் முதல் ஸ்பெயின் இளவரசி வரை யாரையும் விட்டுவைக்காத கரோனா, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவி சோபி க்ரிகோயரையும் பாதித்திருந்தது.

கடந்த இரண்டு வாரங்களாக கரோனா பாதிக்கப்பட்ட அவருக்குத் தீவிர சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இந்நிலையில் தற்போது அவருக்கு கரோனா பாதிப்பு குணமாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடாவில் இதுவரை 6300க்கும் அதிகமானோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், 65 பேர் உயிரிழந்துள்ளனர்.