Ship capsized at sea 13 Indians are missing

கடலில் கப்பல் கவிழ்ந்த விபத்தில் 13 இந்தியர்கள் உட்பட 16 பேர் மாயமான சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

ஓமன் அருகே 117 மீட்டர் நீளமுள்ள பிரஸ்டீஸ் பால்கான் என்ற பெயரிலான சிறிய ரக எண்ணெய் கப்பல் ஒன்று கடலில் பயணம் மேற்கொண்டிருந்தது. அப்போது இந்தக்கப்பல் எதிர்பாராத விதமாக கடலில் கவிழ்ந்தது. இந்தக் கப்பலில் மொத்தம் 16 பணியாளர்கள் பயணம் செய்துள்ளனர். இவர்களில் 13 பேர் இந்தியர்களும், 3 பேர் இலங்கையைச் சேர்ந்தவர்களும் ஆவர். கப்பல் கவிழ்ந்த இந்த விபத்தில் மாயமான 16 பேரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.