100 மில்லியன் பயன்பாட்டாளர்களின் தகவல்கள் திருடப்பட்டுள்ளதாகவும் அதற்காக மக்களிடம் மன்னிப்பு கேட்பதாகவும் செய்தி வெளியிட்டுள்ளது குவோரா நிறுவனம். கூகுளுக்கு பிறகு தங்களது சந்தேகங்களை தீர்த்துக்கொள்ள மக்கள் பெரும்பாலும் உபயோகிப்பது குவோரா செயலி தான். அப்படிப்பட்ட செயலியிலிருந்து தங்கள் தகவல்கள் திருடப்பட்டிருப்பது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து செய்தி வெளியிட்டுள்ள அந்த நிறுவனம் இந்த செயலுக்காக வருத்தம் தெரிவித்துள்ளது. மேலும் பாதுகாப்பு நடவடிக்கையாக இந்த செயலியில் உள்ள அனைவரின் கணக்குகளும் லாக் அவுட் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
100 மில்லியன் பயன்பாட்டாளர்களின் தகவல்கள் திருட்டு; மன்னிப்பு கேட்ட நிறுவனம்
Advertisment