ஒரு வாரமாக ரஷ்யா உக்ரைன் மீது தாக்குதலைத் தொடங்கி நடத்தி வருகிறது. தொடர் போர் சூழல் காரணமாக அங்கு பதற்றம் நிலவி வரும் நிலையில் தொடர் தாக்குதல் நடத்திவரும் ரஷ்யா, பல முக்கிய நகரங்களைக் கைப்பற்றி முன்னேறி வருகிறது. இரு தரப்பிற்கும் இடையே கடந்த திங்கட்கிழமை பெலாரஸ் நாட்டில் உள்ள கோமல் நகரில் பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில், இறுதி முடிவு எதுவும் எட்டப்படாமல் அப்பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
இந்நிலையில் சப்ரோசியா அணுமின் நிலையத்தைரஷ்யா கைப்பற்றியுள்ளதாகத்தகவல்கள் வெளியாகியுள்ளது. ஐரோப்பாவின் மிக முக்கிய மற்றும் மிகப்பெரிய அணுமின் நிலையமானசப்ரோசியா அணுமின் நிலையத்தின் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியிருந்தநிலையில், தற்பொழுது அந்த அணுமின் நிலையத்தை ரஷ்யா கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.