Skip to main content

ரஷ்யா - வடகொரியா அதிபர்கள் சந்திப்பு! எச்சரிக்கும் அமெரிக்கா

Published on 14/09/2023 | Edited on 14/09/2023

 

Russia - North Korea presidents meeting! America on alert

 

ரஷ்யா - உக்ரைன் இடையிலான போர் 18 மாதங்களைக் கடந்து தொடர்ந்து நீடித்து வருகிறது. இதனால், ஏராளமான ஆயுதங்களை செலவழித்த ரஷ்யாவிற்கு ஆயுத உதவி தேவைப்படுவதாக கூறப்படுகிறது. இதனிடையே, வடகொரியா உடன் ரஷ்ய வடிவமைப்பைக் கொண்டு உருவாக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான பீரங்கி குண்டுகள், ஆயுதங்கள், மற்றும் ராக்கெட்டுகள் இருக்கின்றன. இதனால், வட கொரியாவிடம் இருந்து ஆயுதங்களை பெற வேண்டும் என ரஷ்யா அதிபர் விளாதிமிர் புதின் ஆர்வம் காட்டி வருகிறார் என்று கூறப்பட்டது.

 

இந்த நிலையில், வட கொரியா அதிபர் கிம் ஜான் உங், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினை சந்திக்க பாதுகாப்பு வசதி கொண்ட சிறப்பு ரயில் மூலம் நேற்று ரஷ்யாவுக்கு சென்றார். அதன்படி நேற்று வடகொரிய அதிபர் கிம் ஜான் உங், ரஷ்ய அதிபரை சைபீரியாவில் சந்தித்து பேசினார். இந்தச் சந்திப்பை உலக நாடுகள் மிக உன்னிப்பாக கவனித்தன. 

 

Russia - North Korea presidents meeting! America on alert

 

இந்தச் சந்திப்பில் இரு தரப்பிலும், ஆயுத ஒப்பந்தங்களை ஏற்படுத்திக்கொள்வது தொடர்பாக பேசியதாக தெரிகிறது. இரு நாடுகளுக்கு இடையேயான ஆயுத ஒப்பந்தம் கையெழுத்தாகியிருந்தால் ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் நீடிக்க வாய்ப்புள்ளது என்றும் அஞ்சப்படுகிறது.

 

இதற்கிடையே, ரஷ்யாவிற்கு ஆயுதங்களை வழங்கி அதற்கு பதிலாக எரிசக்தி, அதி நவீன ஆயுத தொழில்நுட்பம் ஆகியவற்றைப் பெற வடகொரியா அதிபர் கிம் திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டது. அதேபோல், ரஷ்யா நடத்திவரும் போருக்கு வடகொரியா முழு ஆதரவு தருவதாக கிம் ஜான் உங் தெரிவித்துள்ளார். 

 

Russia - North Korea presidents meeting! America on alert

 

இந்நிலையில், அமெரிக்கா இது குறித்து தனது கருத்தைத் தெரிவித்துள்ளது. வாஷிங்டனில் பேசிய வெள்ளை மாளிகைச் செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர், “ரஷ்யாவிற்கும், வடகொரியாவிற்கும் ஏற்கனவே தங்கள் நாடு பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. அவை ஆயுத ஒப்பந்தங்களை மேற்கொண்டால், புதிய தடைகள் விதிக்கப்படும்” என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

“உக்ரைனுடனான போர் நிறுத்தத்திற்குத் தயார், ஆனால்...” - கண்டிஷன் போட்ட ரஷ்ய அதிபர்

Published on 14/06/2024 | Edited on 14/06/2024
Russian President Ready for a cease-fire with Ukraine

உக்ரைன் - ரஷ்யா இடையே, கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக போர் நீடித்து வருகிறது. இதில், உக்ரைனை நிலம், நீர் உள்ளிட்ட பகுதிகளில் சூழ்ந்து கொண்டு மீண்டும் ரஷ்யா தீவிர தாக்குதலைத் தொடுத்து வருகிறது. இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு நாடுகள் முயன்றும், போர் நின்றபாடில்லை. அதே வேளையில், உக்ரைனுக்கு அமெரிக்கா தொடர்ந்து போர் ஆயுதங்களை வழங்கி வருவதாக ரஷ்யா தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.

இதனிடையே, ரஷ்ய அதிபர் தேர்தலில் பெரும்பான்மை வாக்குகளுடன் விளாடிமிர் புதின், 5வது முறையாக அதிபராக கடந்த மே 7ஆம் தேதி பொறுப்பேற்றார். இந்த நிலையில், போர் நிறுத்தத்திற்கு உக்ரைனுடன் பேச்சுவார்த்தைக்கு ரஷ்யா தயாராக இருப்பதாக சர்வதேச  செய்தி நிறுவனங்கள் கூறியதாகக் கூறப்பட்டது. 

இந்த நிலையில் உக்ரைன் இதைச் செய்தால் போர் நிறுத்தத்திற்குத் தயாராக இருப்பதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் உரையாற்றிய விளாடிமிர் புதின் கூறியதாவது, “கெய்வ் பகுதி உள்ளிட்ட நான்கு ஆக்கிரமிக்கப்பட்ட உக்ரேனிய பிராந்தியங்களிலிருந்து துருப்புக்களை வாபஸ் பெற்றால், வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பில் சேரும் திட்டத்தைக் கைவிட்டால் உடனடியாக போர் நிறுத்தத்திற்கு உத்தரவிடத் தயார். நாங்கள் அதை உடனடியாக செய்வோம்” எனத் தெரிவித்துள்ளார்.

Next Story

அதிபர் தேர்தலில் சிக்கல்?; டொனால்ட் டிரம்ப்புக்கு எதிராக அதிரடி தீர்ப்பளித்த நீதிமன்றம்!

Published on 31/05/2024 | Edited on 31/05/2024
 Donald Trump was convicted by the court!

குடியரசு கட்சியைச் சேர்ந்த டொனால்ட்  ட்ரம்ப், அமெரிக்க அதிபராக கடந்த 2016 ஆம் ஆண்டு வெற்றி பெற்றார். அதனைத் தொடர்ந்து நடந்த 2020 ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பைடனை எதிர்த்துப் போட்டியிட்டார். அந்த தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்று அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்றார்.

இதையடுத்து, புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடனிடம் ஆட்சி பொறுப்பை வழங்குவதற்கு வழிவகை செய்யும் வெற்றிச் சான்றிதழ் அளிப்பு நிகழ்ச்சி நாடாளுமன்றத்தில் 2021 ஆம் ஆண்டு நடைபெற்றது. அப்போது அந்த நிகழ்ச்சியை நடத்த விடாமல், டிரம்ப்பின் ஆதரவாளர்கள் வெள்ளை மாளிகை முன்னால் நின்று கலவரத்தில் ஈடுபட்டனர். அவர்களை விரட்டியடிக்க போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 4 பேர் பரிதாபமாக பலியாகினர். ஒட்டுமொத்த அமெரிக்காவையும் உலுக்கிய இந்த கலவரத்தில் டொனால்ட் ட்ரம்ப்புக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. மேலும், அந்த அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக டிரம்ப் பல்வேறு குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டுகளும் எழுந்தன.

அதனைத் தொடர்ந்து, வெள்ளை மாளிகையை விட்டு டிரம்ப் வெளியேறிய பின்பு, அமெரிக்கா அரசின் ரகசிய ஆவணங்களை அவர் எடுத்துச் சென்றதாகக் குற்றச்சாட்டும் எழுந்தது. இது தொடர்பாக முன்னாள் அதிபர் டிரம்ப் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் கொலம்பியா மாவட்ட நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகின்றது. இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் உள்ள நீதிமன்றங்களில் அவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.

அதே போல் டொனால்ட் ட்ரம்ப், நடிகை ஸ்டோமி டேனியல்ஸ் உடன் இருந்த உறவை மறைக்க 2016 தேர்தல் பிரச்சார நிதியில் இருந்து, அவருக்கு ஒரு லட்சத்து 30 ஆயிரம் டாலர் வழங்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. மான்ஹட்டன் கிராண்ட் ஜூரி, ட்ரம்ப் மீதான இந்த கிரிமினல் குற்றச்சாட்டை முன் வைத்தது. இவ்வழக்கில் ட்ரம்பிற்கு ஆதரவாக வாதாடிய வழக்கறிஞர் திடீரென அவருக்கு எதிராக சாட்சியளித்தார். தொடர்ந்து ட்ரம்ப் பணம் வழங்கியதற்கான ஆதாரத்தையும் அதிகாரிகள் கைப்பற்றினர். 

அதனைத் தொடர்ந்து, இது தொடர்பான வழக்கு  விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், இந்த வழக்கின் பலகட்ட விசாரணைக்கு பின், டொனால்ட் டிரம்பு குற்றவாளி என நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. இதையடுத்து, டொனால்ட் டிரம்புக்கு எதிராக 34 குற்றச்சாட்டுகளும் நிரூபணம் ஆனதால் ஜூலை 11ஆம் தேதி தண்டனை விவரம் அறிவிக்கப்படும் என நியூயார்க் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அமெரிக்கா அதிபராக இருந்த ஒருவர் குற்றவியல் வழக்கில் தண்டனை பெறுவது இதுவே முதல்முறை என கூறப்படுகிறது. இந்த ஆண்டு நடைபெறும் அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் டிரம்ப் மீண்டும் போட்டியிட தயாராகி வரும் நிலையில், இந்த தீர்ப்பு அவருக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.