Skip to main content

ரஷ்யா- வடகொரியா அதிபர்கள் சந்திப்பு; ஆயுத பரிமாற்றத்திற்கு ஒப்பந்தம்?

Published on 13/09/2023 | Edited on 13/09/2023

 

Russia-North Korea Presidents Meet for Arms Transfer Agreement?

 

ரஷ்யா - உக்ரைன் இடையிலான போர் 18 மாதங்களை கடந்து தொடர்ந்து நீடித்து வருகிறது. இதனால், ஏராளமான ஆயுதங்களை செலவழித்த ரஷ்யாவிற்கு ஆயுத உதவி தேவைப்படுவதாக கூறப்படுகிறது. இதனிடையே, வட கொரியா உடன் ரஷ்ய வடிவமைப்பைக் கொண்டு உருவாக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான பீரங்கி குண்டுகள், ஆயுதங்கள், மற்றும் ராக்கெட்டுகள் இருக்கின்றன. இதனால், வட கொரியாவிடம் இருந்து ஆயுதங்களை பெற வேண்டும் என ரஷ்யா அதிபர் விளாதிமிர் புதின் ஆர்வம் காட்டி வருகிறார் என்று கூறப்பட்டது.

 

இதற்கிடையே, வட கொரியா அதிபர் கிம் ஜான் உங், ரஷ்ய அதிபரை சந்திக்க இருப்பதாக ரஷ்ய ஊடகங்கள் சில நாள்களுக்கு முன் தெரிவித்திருந்தன. மேலும்,  உக்ரைனுக்கு எதிராக ரஷ்யாவுக்கு ஆயுதங்கள் வழங்குவது தொடர்பாக இரு நாட்டுத் தலைவர்களிடையே இந்த சந்திப்பு நடைபெறவுள்ளதாக ரஷ்யா நாட்டு ஊடகங்கள் தெரிவித்திருந்தன. அதே போல், தென் கொரியா ஊடகங்கள், வடகொரியா அதிபர் கிம், ரஷ்யா புறப்பட்டு சென்றுவிட்டதாக வெளியிட்டிருந்தது. ஆனால், இது குறித்து, வட கொரியா ஊடகம் எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடவில்லை. 

 

இந்த நிலையில், வட கொரியா அதிபர் கிம் ஜான் உங் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினை சந்திக்க பாதுகாப்பு வசதி கொண்ட சிறப்பு ரயில் மூலம் நேற்று ரஷ்யாவுக்கு சென்றுள்ளார்.  கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு  வடகொரிய அதிபர் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு பயணம் ரஷ்யா தான். அதனால், இந்த சந்திப்புகளிடையே முக்கிய பேச்சு வார்த்தை நடக்கலாம் என்று உலக நாடுகள் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கிறது. மேலும், இரு நாடுகளுக்கு இடையேயான ஆயுத ஒப்பந்தம் கையெழுத்தானால் ரஷ்யா- உக்ரைன் இடையேயான போர் நீடிக்க வாய்ப்புள்ளது என்றும் அஞ்சப்படுகிறது.

 

இதற்கிடையே, ரஷ்யாவிற்கு ஆயுதங்களை வழங்கி அதற்கு பதிலாக எரிசக்தி, அதி நவீன ஆயுத தொழில்நுட்பம் ஆகியவற்றை பெற வடகொரியா அதிபர் கிம் திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டது. இதன் மூலம் அமெரிக்காவிற்கு எதிரான வல்லமை கொண்ட நாடாக காட்டிக்கொள்ளவும் வடகொரியா அதிபர் கிம் திட்டமிட்டு வருவதாக கூறப்பட்டது. ஆயுத பரிமாற்றம் நடக்கலாம் என்பதாலும், தற்போது உக்ரைன்- ரஷ்யா இடையே போர் நடைபெற்று வருவதாலும், இரு நாட்டு அதிபர்களின் சந்திப்பு உலக நாடுகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

காதலியை வன்கொடுமை செய்து 111 முறை கத்தியால் குத்திக் கொன்ற காதலன் விடுதலை 

Published on 12/11/2023 | Edited on 12/11/2023

 

Boyfriend who stabbed his girlfriend 111 times to incident in Russia acquitted

 

ரஷ்யாவில் வேரா பெக்டெலோவா என்ற பெண், விளாடிஸ்லாவ் கன்யூஸ் என்பவரைக் காதலித்து வந்தார். பின்பு இவர்களுக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக வேரா பெக்டெலோவா தனது காதலன் விளாடிஸ்லாவ் கன்யூஸ் உடனான உறவை முறித்துக்கொண்டார். இதனால் ஆத்திரமடைந்த விளாடிஸ்லாவ் கன்யூஸ், வேரா பெக்டெலோவாவை பாலியல் வன்கொடுமை செய்து சித்திரவதை செய்துள்ளார். 

 

பின்பு கத்தியை எடுத்து 111 முறை வேரா பெக்டெலோவாவை சரமாரியாகத் தொடர்ந்து குத்திக் கொன்றுள்ளார்.  வேரா பெக்டெலோவாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், காதலன் விளாடிஸ்லாவ் கன்யூஸை கைது செய்தனர். இந்த வழக்கில் விளாடிஸ்லாவ் கன்யூஸுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கி ரஷ்ய நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து விளாடிஸ்லாவ் கன்யூஸ் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் ரஷ்ய அதிபர் புதின், விளாடிஸ்லாவ் கன்யூஸை விடுதலை செய்துள்ளார்.  

 

ரஷ்ய - உக்ரைன் போரில் ரஷ்யா சார்பாக போரில் ஈடுபட குற்றவாளி விளாடிஸ்லாவ் கன்யூஸ் விருப்பம் தெரிவித்ததை அடுத்து அதிபர் புதின் கருணை அடிப்படையில் அவரை விடுதலை செய்துள்ளார். 17 வருட சிறைத் தண்டனையில் ஒரு வருடத்தைக் கூட இன்னும் முழுவதுமாக முடிக்காத விளாடிஸ்லாவ் கன்யூஸ் தற்போது ரஷ்யா சார்பாக உக்ரைன் போரில் கலந்துகொள்ளவுள்ளார். விளாடிஸ்லாவ் கன்யூஸ், ரஷ்ய ராணுவ உடையில் கையில் ஆயுதத்துடன் இருக்கும் புகைப்படம் ஒன்றும் வைரலாகி வருகிறது. 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

“ரஷ்யாவைப் போல் அமெரிக்காவும் ஒரு நாள் உடையும்” - ஹமாஸ் எச்சரிக்கை

Published on 04/11/2023 | Edited on 04/11/2023

 

America will one day break like Russia

 

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே 25 நாட்களுக்கும் மேலாகப் போர் நடைபெற்று வரும் நிலையில், நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. கடந்த 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை நடத்தி வருகிறது. இப்படியாக இரு தரப்பிலிருந்து ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனிடையே காசாவை சுற்றி வளைத்து தனது பீரங்கி குண்டுகளால் காசா நகரையே இஸ்ரேல் நிர்மூலமாக்கிக் கொண்டிருக்கிறது. 

 

தரைவழித் தாக்குதலைத் தீவிரப்படுத்திய இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பினரை ஒருவர் விடாமல் அழித்தொழிப்போம் என்று சபதம் எடுத்துள்ளனர். இதுவரை 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவி பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இஸ்ரேலுக்கு ஆதரவாக இருக்கும் அமெரிக்கா ஒரு நாள் ரஷ்யா போல் உடையும் என ஹமாஸ் அமைப்பின் மூத்த அதிகாரி அலி பராகா தெரிவித்துள்ளார்.

 

இது தொடர்பாக லெபனான் நாட்டின் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த அவர், “பிரிட்டனால் உருவாக்கப்பட்டது தான் அமெரிக்கா. நீண்ட காலத்திற்கு சக்தி வாய்ந்த நாடாக அமெரிக்காவால் இருக்க முடியாது. ரஷ்யாவைப் போல் ஒருநாள் உடையும். இந்தப் பகுதியில் அமெரிக்காவின் எதிரிகள் அனைவரும் ஒன்றாக ஆலோசனை நடத்தி வருகின்றனர். அமெரிக்காவை தாக்கக்கூடிய திறன் வடகொரியாவிடம் உள்ளது. எங்களுடைய அணியில் அவர்களும் ஒரு பகுதியாக உள்ளனர். அண்மையில் ஹமாஸ் அமைப்பினர் ரஷியாவிற்கு சென்றனர், அடுத்து சீனாவுக்கும் செல்லவுள்ளனர்” என்று கூறியுள்ளார். 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்