இங்கிலாந்து, வேல்ஸ், ஸ்காட்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்து முழுவதும் உள்ள 650 தொகுதிகளுக்கு டிசம்பர் மாதம் நடைபெற்ற தேர்தலில் வெற்றிபெற்று போரிஸ் ஜான்சன் பிரதமாக பொறுப்பேற்ற நிலையில், அந்நாட்டின் நிதியமைச்சராக இன்போசிஸ் நாராயணமூர்த்தியின் மருமகன் ரிஷி சுனக் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
டிசம்பர் மாதம் நடைபெற்ற தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சியின் போரிஸ் ஜான்சன் பெரும்பான்மை இடங்களில் வென்று மீண்டும் ஆட்சி அமைத்தார். அதன்பின்னர் அந்நாட்டு அமைச்சரவையில் பல மாற்றங்களை செய்து வருகிறார் போரிஸ் ஜான்சன். இதில் இந்திய வம்சாவளி அரசியல்வாதியான ரிஷி சுனக்கை அவர் புதிய நிதியமைச்சராக தற்போது நியமித்துள்ளார். இந்திய தொழிலதிபரான இன்போசிஸ் நாராயணமூர்த்தியின் மருமகனான இவர் யார்க்ஷயர் ரிச்மோண்ட் தொகுதியின் எம்.பி.யாக 2015-ம் ஆண்டு முதல் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.