கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி அன்று கைலாஷ் மானசரோவாருக்கு புனித யாத்திரிக்கைகாக நேபாளம் காத்மாண்டுவுக்குச் சென்றார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. அவர் அங்குள்ள வூட்டு என்னும் ஹோட்டலில் தங்கினார். அப்போது அவர் மாமிசம் சாப்பிட்டதாக உள்ளூர் செய்திகள் வெளிவந்து சர்ச்சையை கிளப்பின. இதன் பின்னர், அந்த ஹோட்டல் நிறுவனமே அவர் சைவ உணவுதான் ஆர்டர் செய்து சாப்பிட்டார் என்றது.

இந்நிலையில், இன்று ராகுல் காந்தி மானசரோவாரில் இருக்கும் ஏரியின் புகைப்படத்தை எடுத்து, அதனுடன் “மானசரோவார் ஏரியின் நீர் மென்மையானது, சலனமற்றது, அமைதியானது. ஏரி நமக்கு பலவற்றை தந்தாலும் அது ஒன்றையும் இழப்பதில்லை. யார் வேண்டுமானாலும் அந்த நீரை பருகலாம். எந்தவித வெறுப்பும் இங்கில்லை. இதனால்தான் இந்தியாவில் அனைவரும் இந்த நீரை வழிபடுகிறோம்” என்று பதிவு செய்துள்ளார்.

Advertisment

மேலும், இந்த ட்விட்டிற்கு முந்தைய ட்விட்டாக, “ கைலாஷ் நம்மை அழைத்தால்தான் நம்மால் வரமுடியும். எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்ததற்கு நான் மகிழ்ச்சி அடைகிறேன் மற்றும் இந்த அழகிய பயணத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்ளவும் முடியும்.” என்று பதிவிட்டுள்ளார்.

Advertisment

ஆகஸ்ட் 31 ஆம் தேதி இந்த புனிதயாத்திரைக்கு சென்ற நாள் அன்று ட்விட்டரில், கைலாஷ மலையின் புகைப்படத்தை பதிவிட்டு, சமஸ்கிருத மந்திரங்களையும் பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. செப்டம்பர் 12 ஆம் தேதி புனித யாத்திரையை முடித்துவிட்டு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.