இங்கிலாந்து ராணி எலிசபெத் உயிரிழந்தார். அவருக்கு வயது 96. மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பிலிருந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பிரிட்டன் வரலாற்றில் அதிக காலம் ராணியாக இருந்தவர் என்ற சிறப்பை பெற்றவர் இரண்டாம் எலிசபெத். இவர், கடந்த 1952 முதல் பிரிட்டன் ராணியாக இருந்து வந்தார்.பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவர் இளவரசர் பிலிப், கடந்த ஆண்டு ஏப்ரல் 9, 2021-ல் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ராணி இரண்டாம் எலிசபெத்திற்கு உலகத் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகினர். ராணி இரண்டாம் எலிசபெத்தை தொடர்ந்து பிரிட்டனின் இளவரசர் மூன்றாம் சார்லஸ் பிரிட்டனின் மன்னராக பொறுப்பேற்றார். இதனால் பிரிட்டனின் தேசிய கீதம் “கடவுள் இளவரசியை காப்பாற்றுவார்” என்பதில் இருந்து “கடவுள் அரசரை காப்பாற்றுவார்” என மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தேசிய கீதத்தின் மற்ற வரிகளில் மாற்றம் செய்யப்படவில்லை.
இதற்கு முன் மன்னர் ஆறாம் ஜார்ஜ் இறப்பின் போது தேசிய கீதம் மாற்றம் செய்யப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.