பறக்கும் ஹெலிகாப்டரில் 25 புல்அப்ஸ் எடுத்து நெதர்லாந்தைச் சேர்ந்த யூ ட்யூபர் பிரவுனி கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
யூ ட்யூபரான பிரவுனி உடல் தகுதியை மேம்படுத்தும் ஜிம்னாஸ்டிக் பயிற்சிகள் வழங்கும் நிபுணரும் ஆவார். இவர் பறக்கும் ஹெலிகாப்டரில் 25 புல்அப்ஸ் எடுத்து உலக சாதனை படைத்துள்ளார். முன்னதாக ஆர்மீனியாவைச் சேர்ந்த ரோமன் சஹ்ரத்யான், இதேபோல 23 புல்அப்ஸ் எடுத்திருந்ததே உலக சாதனையாக இருந்த நிலையில், தற்போது அந்தச் சாதனையை பிரவுனி முறியடித்துள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.