
அண்மையில் துருக்கி மற்றும் சிரியா ஆகிய நாடுகளில் ஏற்பட்ட தொடர் நிலநடுக்கம் காரணமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்த சம்பவம் உலக அளவில் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் ஈக்வடாரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது
தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. ஈக்வடாரின் இரண்டாவது பெரிய நகரமான குயாக்குவில் இருந்து 80 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பாலோன் நகருக்கு அருகே ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவானதாக அந்நாட்டு புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்பொழுது வரை இந்த நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக உள்ளது. கட்டிட இடிபாடுகளில் மேலும் பலர் சிக்கி இருப்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.