Skip to main content

போப் ஆண்டவர் பதவியிலிருந்து விலகலா? - போப்  பிரான்சிஸ் பதில்!

Published on 01/09/2021 | Edited on 01/09/2021

 

pope francis

 

கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவராகக் கருதப்படுபவர் போப் ஆண்டவர். இப்போது  ஜார்ஜ் மேரியோ பெர்கோக்லியோ என்பவர் போப் ஆண்டவராக இருந்து வருகிறார். கடந்த 2013 ஆம் ஆண்டு போப் ஆண்டவராக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் போப் பிரான்சிஸ் என அழைக்கப்படுகிறார்.

 

இந்தநிலையில் பெருங்குடல் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த போப் பிரான்சிஸுக்கு கடந்த ஜூலை மாதம் அறுவை சிகிச்சை நடந்தது. இந்த சூழலில் போப் பிரான்சிஸ், போப் ஆண்டவர் பதவியிலிருந்து விலக முடிவெடுத்துள்ளதாகவும், இதனைத்தொடர்ந்து புதிய போப் ஆண்டவரைத் தேர்ந்தெடுப்பதற்கான கூட்டம் வாடிகனில் நடைபெற்றதாகவும் தகவல் வெளியானது.

 

இந்தநிலையில் போப் பிரான்சிஸ் ஸ்பானிஷ் வானொலிக்கு அளித்த பேட்டியில், போப் ஆண்டவர் பதவியிலிருந்து விலகப்போவதாக வந்த தகவல்களைத் திட்டவட்டமாக மறுத்துள்ளார். தனது மனதில் பதவி விலகுவது குறித்த எண்ணமே எழவில்லை எனவும் போப் பிரான்சிஸ் கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

“இவர்கள் எப்போது போர்க் கதைகளை முடிப்பார்கள்” - போப் பிரான்சிஸ் வேதனை

Published on 03/11/2023 | Edited on 03/11/2023

 

Pope Francis laments Israel-Palestine conflict

 

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே 25 நாட்களுக்கும் மேலாகப் போர் நடைபெற்று வரும் நிலையில், நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. கடந்த 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை நடத்தி வருகிறது. இப்படியாக இரு தரப்பிலிருந்து ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனிடையே காசாவை சுற்றி வளைத்து தனது பீரங்கி குண்டுகளால் காசா நகரையே இஸ்ரேல் நிர்மூலமாக்கிக் கொண்டிருக்கிறது. 

 

தரைவழித் தாக்குதலைத் தீவிரப்படுத்திய இஸ்ரேல் கிட்டத்தட்ட அனைத்து தொலைத் தொடர்பு சேவைகளை அழித்து உலகத்தில் இருந்து காசாவை தனிமைப்படுத்தியுள்ளது. ஹமாஸ் அமைப்பினரை ஒருவர் விடாமல் அழிக்க நினைக்கும் இஸ்ரேலின் தாக்குதலில் ஆயிரக்கணக்கான அப்பாவி பாலஸ்தீன மக்கள் தினந்தோறும் கொல்லப்பட்டு வருகின்றனர். இதுவரை 8,900 அப்பாவி பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், ஐ.நா ஊழியர்கள் 70 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும். அதில் 70 சதவீதம் பேர் பெண்களும், குழந்தைகளும் என ஐ.நா கவலை தெரிவித்துள்ளது. 

 

இந்த நிலையில் போப் பிரான்சிஸ், புனித பூமியில் நடக்கும் போர் என்னை பயமுறுத்துகிறது. இவர்கள் எப்போது போர் கதைகளை முடிப்பார்கள் என்று காத்துக்கொண்டிருக்கிறேன். இஸ்ரேலியர்கள் மற்றும் பாலஸ்தீனர்கள் ஒன்றாக வாழ வேண்டிய இரு நாட்டு மக்கள். பாலஸ்தீனத்தை தனி நாடாக அறிவிப்பதன் மூலமே போரை முடிவுக்கு கொண்டு வர முடியும். ஜெருசேலம் நகரை ஐ.நா நிர்வகிக்கும் வகையில் சிறப்பு அந்தஸ்து கொண்டு வரவேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். மேலும், ஒஸ்லோ ஒப்பந்தங்களை நடைமுறைப்படுத்த வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டுள்ளார். 

 

இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே சமாதானத்தை முன்னெடுப்பதையும், மேற்குக் கரையின் பெரும்பகுதியை பாலஸ்தீனத்தின் கட்டுப்பாட்டில் கொண்டுவருவதை நோக்கமாகவும் கொண்டு போடப்பட்ட ஒப்பந்தம் தான் ஒஸ்லோ ஒப்பந்தம். இதில் இரு நாடுகளும் கையெழுத்திட்டன. ஆனால் இரு தரப்புக்கு இடையேயான அமைதி, சில ஆண்டுகள் மட்டுமே நீடித்த நிலையில், மீண்டும் வன்முறை கோரத் தாண்டவம் ஆடத்தொடங்கியது குறிப்பிடத்தக்கது. 

 

 

Next Story

போப் ஆண்டவருடன் பலதரப்பட்ட விவகாரங்களை விவாதித்த பிரதமர் மோடி!

Published on 30/10/2021 | Edited on 30/10/2021

 

NARENDRA MODI - POPE FRANCIS

 

அக்டோபர் 30 மற்றும் 31ஆம் தேதிகளில் நடைபெறும் 16வது ஜி20 நாடுகளின் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இத்தாலி நாட்டிற்குச் சென்றுள்ளார். அவரோடு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோரும் சென்றுள்ளனர்.

 

இந்தநிலையில், இத்தாலி பிரதமரின் அழைப்பை ஏற்று வாடிகன் நகருக்குப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, இன்று (30.10.2021) போப் ஆண்டவரைச் சந்தித்து உரையாடினார். போப் ஆண்டவரைச் சந்திக்கும் ஐந்தாவது இந்திய பிரதமர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது.

 

போப் ஆண்டவரைச் சந்தித்த பிரதமர் மோடி, "போப் பிரான்சிஸ் அவர்களுடன் மிகவும் அன்பான சந்திப்பை மேற்கொண்டேன். அவருடன் பலதரப்பட்ட பிரச்சனைகளைப் பற்றி விவாதிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது" என தெரிவித்துள்ளார். மேலும், போப் பிரான்சிஸை இந்தியா வருமாறு அழைத்ததாகவும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.