
173 பயணிகளுடன் சென்ற விமானம் விபத்தில் சிக்கிய நிலையில் நூலிழையில் பயணிகள் அனைவரும் உயிர் தப்பித்த சம்பவம் பிலிப்பைன்ஸில் நடந்துள்ளது.
பிலிப்பைன்ஸ் நாட்டின் செவ்வோ நகரில் கொரிய நாட்டைச் சேர்ந்த விமானம் ஒன்று தரை இறங்கியது. அப்பொழுது ஓடுபாதையை விட்டு விலகிய விமானமானது புல்தரையில் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதனால் விமானத்தை முன்பகுதி பலத்த காயமடைந்தது. இருப்பினும் அந்த விமானத்தில் பயணித்தமொத்த பயணிகள் 173 பேரும் எந்தவித காயமும் இன்றி பத்திரமாக மீட்கப்பட்டனர். இந்த விமான விபத்திற்கு காரணம் மோசமான வானிலை என்றும், இரண்டு முறை விமானத்தைத் தரையிறக்க முயன்றும் மூன்றாவது முறைதான் தரை இறக்க முடிந்தது என்றும் விமான ஓட்டிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)