
700 வருட பாரம்பரியம் கொண்ட கோவில் முன் அமைந்துள்ள புனித மரத்திற்கு முன்பு ரஷ்ய மாடல் அழகி ஒருவர் நிர்வாணமாக புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தோனேஷியாவில் உள்ள பாலி என்ற இடத்திற்குசுற்றுலா வந்த ரஷ்யாவை சேர்ந்த மாடல் அழகி அலீனா ஃபஸ்லீபா, தபனான் என்ற இடத்தில் உள்ள 700 வருட பழமையான மரத்தின் முன்பு நிர்வாணமாகபுடைபடம் எடுத்து அதனை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அங்குள்ள உள்ளூர் மக்களால் அந்த மரம் புனிதமாக போற்றப்படும் நிலையில் அலீனாவின் இந்த செயல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ரஷ்ய மாடல் மீது கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் இந்தோனேஷியாவின் ஐ.டி.இ சட்டத்தின்படி இந்த குற்றத்திற்கு அபராதத்தோடு ஆறு ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு இருப்பதாக சொல்லப்பட்டது. இந்நிலையில் சர்ச்சைக்குரிய புகைப்படத்தை மாடல் அழகி இன்ஸ்டா பக்கத்தில் இருந்து நீக்கியத்துடன்இதுதொடர்பாக மன்னிப்பும் கோரியுள்ளார். அந்த மரத்தின் வரலாறு, புனிதம் குறித்து தமக்கு தெரியாது என்று தெரிவித்துள்ள அவர், அங்கு மீண்டும் சென்று அந்த மர்த்திற்கு முன்பு அமர்ந்து மன்னித்துக்கொள்ளும்படி மனம் உருகி வேண்டிக்கொள்ளும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)