அமெரிக்காவின்டென்வர் நகரிலிருந்து ஹொனலுலுபகுதிக்குபோயிங் 777-200 விமானம் ஒன்று, 231 பயணிகளோடும், 10 ஊழியர்களோடும் பயணத்தைத் தொடங்கியது. பயணத்தைத் தொடங்கிய சிறிது நேரத்திலேயே விமானத்தின் என்ஜின்பழுதாகிதீப்பிழப்புகள் வெளிவர ஆரம்பித்தன. மேலும் என்ஜினின் சிலபாகங்கள்கழண்டுவிழத்தொடங்கின.
இதனையடுத்து விமானம் டென்வர்விமான நிலையத்திலேயே, விமானியால் சாமர்த்தியமாக தரையிறக்கப்பட்டது. இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. விமானத்தில் இருந்த 231 பயணிகளும், 10 ஊழியர்களும் காயமின்றி உயிர் தப்பினர். அந்த விமானத்தில் பயணம் செய்த ஒருவர், ‘என்ஜின் பழுதானபோது நாங்கள் அவ்வளவுதான் என நினைத்தோம்’எனக் கூறியுள்ளார். இதுகுறித்து அவர், “நாங்கள் அவ்வளவுதான் என்று நினைத்தேன். நாங்கள் கீழே விழப்போகிறோம் என்று எண்ணினேன். விமானி அற்புதமாகசெயல்பட்டார்” எனத் தெரிவித்துள்ளார்.
விமானத்தின் என்ஜின்பழுதானதுகுறித்துஅமெரிக்காவின்கூட்டாட்சி விமான நிர்வாகம், விசாரணை நடத்தி வருகிறது. எதனால் என்ஜின்பழுதானதுஎன்பதுகுறித்தகாரணங்கள் எதுவும்வெளியாகவில்லை.