ஆசிரியர் ஒருவர் மாணவனை கொடூரமாக தாக்கி கொன்றதால், கோபமடைந்த சக மாணவர்கள் பள்ளிக்கு தீயிட்டு கொளுத்திய சம்பவம் பாகிஸ்தானில் நடந்துள்ளது.

pakistan school issue

Advertisment

Advertisment

பாகிஸ்தானின் லாகூர் பகுதியில் செயல்பட்டுவரும் அமெரிக்கன் லைஸ்டப் என்ற பள்ளியில் பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்துவருகின்றனர். அந்த பள்ளியில் 10ம் வகுப்பு படித்துவந்த ஹஃபீஸ் என்ற மாணவன் வீட்டுப்பாடத்தை மனப்பாடம் செய்யாததால், ஆத்திரம் கொண்ட ஆசிரியர் அவனை சரமாரியாக அடித்து, மாணவனின் தலை முடியை பிடித்து இழுத்து சுவரில் மோதியுள்ளார். இதில் மயங்கிவிழுந்த சிறுவன், மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லும் போதே உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தங்கள் நண்பன் இறப்பிற்கு காரணமான ஆசிரியர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள் போரட்டம் நடத்திய போது, மாணவர்கள் ஒன்று சேர்ந்து பள்ளி கட்டிடத்திற்கு தீ வைத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல்துறையினர் தீயை கட்டுப்படுத்தியதோடு, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணையும் நடத்தி வருகின்றனர்.