பாகிஸ்தான் பிரதமராக கடந்த மாதம் இம்ரான் கான் தேர்வு செய்யப்பட்டார். அதனை தொடர்ந்து பாகிஸ்தான் அரசாங்கத்தில் பல மாற்றங்கள் நடைபெற்று, செயல்பட்டு வருகின்றன. இது போன்று பலரால் பாராட்டப்பெற்றிருக்கும் இம்ரான் கான் ஆட்சியில், தலைமை ரயில்வே அலுவலர் ஒருவர் மந்திரியின் அணுகுமுறை பிடிக்கவில்லை அதனால் எனக்கு 730 நாட்கள் விடுப்பு வேண்டும் என்று விடுப்பு கடிதம் தன்னுடைய தலைமை அதிகாரிக்கு அனுப்பியுள்ளார்.
இந்த விடுப்பு கடிதம் சமூக வலைதளங்களில் பரவலாக பரவிவருகிறது. பலர் இதை விமர்சித்தும், கிண்டலடித்தும் சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
பாகிஸ்தான் ரெயில்வேத்துறையில் தலைமை வணிக மேலாளராக பணியாற்றி வருபவர் முகமது ஹனிப் குல். இவர் எனக்கு ரயில்வே மந்திரி ஷேக் ரஷீத் அணுகுமுறை எனக்கு பிடிக்கவில்லை. அவரின் கீழ் என்னால் வேலை செய்ய முடியாது என்று 730 நாட்கள் விடுப்பு கேட்டுள்ளார். ஷேக் ரஷீத் ரயில்வே மந்திரியாக பதவியேற்றது கடந்த 20ஆம் தேதி என்பது குறிப்பிடத்தக்கது.