pakistan plane crash video

பாகிஸ்தானில் 91 பயணிகளுடன் சென்ற எர்பஸ் ஏ-320 ரக விமானம் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது உலகம் முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், விமானம் விபத்துக்குள்ளான சி.சி.டி.வி. காட்சியொன்று தற்போது வெளியாகியுள்ளது.

Advertisment

Advertisment

லாகூரிலிருந்து கராச்சி சர்வதேச விமான நிலையம் நோக்கி 91 பயணிகள் மற்றும் எட்டு ஊழியர்களுடன் பயணித்துக்கொண்டிருந்த விமானம் நேற்று மாலை தரையிறங்குவதற்கு 60 வினாடிகள் முன்பு கட்டுப்பாட்டை இழந்து குடியிருப்பு பகுதியில் விழுந்து வெடித்துச் சிதறியது. இந்த விபத்தில் 99 பேர் உயிரிழந்துள்ளனர். உலகையே சோகத்தில் ஆழ்த்தியுள்ள இந்த விமான விபத்து குறித்த வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. விமானம் விழுந்து நொறுங்கிய குடியிருப்பு பகுதியில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான இக்காட்சிகள், கட்டுப்பாட்டை இழந்த விமானம் குடியிருப்பு பகுதிக்குள் விழுந்து வெடித்துத் தீப்பற்றி எரிவதைக் காட்டுகிறது.