Published on 10/10/2020 | Edited on 10/10/2020
இந்தியா, அமெரிக்காவை தொடர்ந்து பாகிஸ்தானும் டிக்டாக் செயலிக்கு தடை விதித்துள்ளது.
சீன செயலியான டிக்டாக் பயனர்களின் தகவல்களைச் சீனாவிற்கு விற்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனைத்தொடர்ந்து, பாதுகாப்பு காரணங்களை சுட்டிக்காட்டி, இந்தியாவில் இந்த செயலி தடை செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து அமெரிக்காவிலும் இந்த செயலியை தடை செய்யத்திட்டமிட்டு வருவதாக அதிபர் ட்ரம்ப் அறிவித்தார். இந்நிலையில், பாகிஸ்தானும் டிக்டாக் செயலிக்கு தடை விதித்துள்ளது. நாகரீகமற்ற மற்றும் ஒழுக்கக்கேடான காணொளிகள் பகிரப்படுவதாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து இந்த நடவடிக்கையைப் பாகிஸ்தான் மேற்கொண்டுள்ளது. சட்டவிரோத இணையம் பதிவுகளை உடனடியாக நீக்குவதற்கான வழிமுறைகளை முழுமையாக பின்பற்ற டிக்டாக் நிர்வாகம் தவறிவிட்டதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.