Skip to main content

பலத்த எதிர்பார்ப்புகளுக்கிடையே 93வது ஆஸ்கர் விருதுகள் அறிவிப்பு!

Published on 26/04/2021 | Edited on 26/04/2021

 

OSCARS AWARDS ANNOUNCED BEST ACTRESS, ACTORS, MUSIC DIRECTORS, FILM DIRECTORS

 

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் 93வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா, இந்திய நேரப்படி இன்று (26/04/2021) காலை 06.30 மணிக்கு தொடங்கியது.

 

சிறந்த திரைக்கதைக்கான விருதை எமரால்ட் ஃபென்னல் பெற்றார்; திரைப்படம்: 'PROMISING YOUNG WOMAN'.

 

சிறந்த தழுவல் திரைக்கதைக்கான விருதை கிறிஸ்டோபர் - ஃப்ளோரியன் ஆகியோர் பெற்றனர்; திரைப்படம்: 'THE FATHER'.

 

சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான விருதை டென்மார்க்கின் 'ANOTHER ROUND' பெற்றது. 

 

சிறந்த துணை நடிகை - டேனியல் கல்லூயா; திரைப்படம்: 'JUDAS AND THE BLACK MESSIAH'.

 

சிறந்த ஒப்பனை மற்றும் சிகையலங்காரத்திற்கான விருதை செர்ஜியோ லோபஸ், மியா நியல் - ஜாமிகா வில்சன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். 'MA RAINEY'S BLACK BOTTOM' என்ற திரைப்படத்துக்காக மூன்று பேரும் சிறந்த சிகையலங்கார விருதைப் பெற்றனர். 

 

சிறந்த இயக்குநருக்கான விருதை சீனாவைச் சேர்ந்த பெண் இயக்குநர் க்ளோயி சாவ் பெற்றார்; திரைப்படம்: 'NOMADLAND'. சிறந்த இயக்குநருக்கான விருது வென்ற இரண்டாவது பெண் இயக்குநர் என்ற பெருமையை க்ளோயி சாவ் பெற்றார்.

OSCARS AWARDS ANNOUNCED BEST ACTRESS, ACTORS, MUSIC DIRECTORS, FILM DIRECTORS

 

சிறந்த ஆடை வடிவமைப்புக்கான விருதை ஆன்ரோத் பெற்றார்; திரைப்படம்: 'MA RAINEY'S BLACK BOTTOM'.

 

சிறந்த குறும்படத்திற்கான விருதை ட்ராவன் - மார்ட்டின் பெற்றுக்கொண்டனர்; குறும்படம்: 'TWO DISTANT STRANGERS'.

 

சிறந்த ஒலிக்கான விருதை 'SOUND OF METAL' திரைப்படத்துக்காக ஐந்து பேர் பெற்றுக்கொண்டனர். இந்த திரைப்படத்திற்காக நிக்கோலஸ், ஜெய்ம், மிச்செலி, கார்லோஸ், பிலிப்  ஆகியோர் விருது பெற்றனர். 

 

சிறந்த படத்தொகுப்புக்கான விருதை 'SOUND OF METAL' படத்துக்காக மிக்கேல் நீல்சன் பெற்றுக்கொண்டார். சிறந்த அனிமேஷன் திரைப்படத்துக்கான விருதை 'SOUL' என்ற திரைப்படத்துக்காக பீட் டாக்டர், டானா முர்ரே இருவரும் பெற்றுக்கொண்டனர்.

 

சிறந்த இசைக்கான விருதை 'SOUL' திரைப்படத்திற்காக ட்ரண்ட் ரெஜ்னார் - ரோஸ் - ஜான் பாட்டீஸ் ஆகியோர் பெற்றனர்.

 

பிரபல இயக்குநர் கிறிஸ்டோபர் நோலனின் 'TENET' திரைப்படம் சிறந்த விஷ்வல் எஃபெக்ட்ஸ் விருதை வென்றது.

 

சிறந்த தயாரிப்பு வடிவமைப்புக்கான ஆஸ்கர் விருதை 'MANK' திரைப்படம் தட்டிச் சென்றது.

 

சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதை 'NOMADLAND' படத்தில் நடித்த பிரான்சஸ் மெக்டோர்மெண்ட் பெற்றார். அமெரிக்காவைச் சேர்ந்த பிரான்சஸ் மெக்டோர்மெண்ட் மூன்றாவது முறையாக ஆஸ்கர் விருதை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை 'THE FATHER' திரைப்படத்தில் நடித்த ஆண்டனி ஹாப்கின்ஸ் பெற்றார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திரைப்படமாகும் உண்மை சம்பவம் - நடிகைக்கு கொலை மிரட்டல்

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
raime sen maakaali poster issue

இந்தி மற்றும் பெங்காலி படங்களில் கவனம் செலுத்தி வருபவர் ரைமா சென். இப்போது இந்தியில் மாகாளி என்ற தலைப்பில் ஒரு படம் நடித்து வருகிறார். இப்படம் 16 ஆகஸ்ட் 1946 அன்று கல்கத்தாவில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்ட சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகிறது. இந்த சம்பவம் இந்தியாவை உலுக்கியது குறிப்பிடத்தக்கது. விஜய் யேலகண்டி இயக்கும் இப்படத்தை விஷ்வ பிரசாத் தயாரிக்க அனுராக் ஹல்டர் இசையமைக்கிறார். 

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கின் போஸ்டர் கடந்த 4ஆம் தேதி வெளியானது. அதில் இந்து மதத்தை குறிக்கும் வகையில் காளி தோற்றத்தில் ஒரு புறமும் முஸ்லீம் மதத்தை குறிக்கும் வகையில் ஹிஜாப் அணிந்த தோற்றத்தில் ஒரு புறமும் இணைந்து இருக்கும் முகம் கொண்ட புகைப்படம் இடம் பெற்றிருந்தது. இந்த போஸ்டரை தொடர்ந்து தொலைப்பேசி வாயிலாக தனக்கு மிரட்டல் வருவதாக ரைமா சென் தெரிவித்துள்ளார். 

raime sen maakaali poster issue

இது தொடர்பாக அவர் கூறுகையில், “மர்ம நபர்களால் பெங்காலி மற்றும் இந்தியில் அலைபேசி கால்கள் வருகிறது. சுசித்ரா சென்னின் பேத்தியாக இருந்த நான் எப்படி படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன் என்பதைப் பொறுத்து மிரட்டல்கள் வந்தன. எதிர்காலத்தில் கொல்கத்தாவில் தான் நீ இருக்க வேண்டும். அதை நினைவில் வைத்துக்கொள் என்கிறார்கள். முதலில் படத்தைப் பார்த்துவிட்டு தங்கள் கருத்தைச் சொல்லுங்கள் என்று நான் மக்களைக் கேட்டுக்கொள்கிறேன்” என்றார். 

Next Story

புடவைகளை விற்று உதவி செய்த பிரபல நடிகை

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
navya nair helped charity people with his saree sold

மலையாள திரையுலகில் 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளவர் நடிகை நவ்யா நாயர். மேலும் தமிழ் மற்றும் கன்னட மொழிகளிலும் நடித்துள்ளார். தமிழில் பிரசன்னா நடிப்பில் வெளியான 'அழகிய தீயே', சேரனின் 'மாயக்கண்ணாடி', முன்னாள் முதல்வர் கலைஞர் எழுதிய 'பாசக்கிளிகள்' உள்ளிட்ட சில படங்களில் நடித்து பிரபலமானார். இப்போது மலையாளத்தில் மற்றும் கன்னட மொழிகளில் கவனம் செலுத்தி வருகிறார். 

இந்த நிலையில் தனது சமூக வலைதளப்பக்கத்தில், தான் ஒரு முறை அணிந்த மற்றும் புதிதாக வாங்கி அணிய முடியாத புடவைகளை ஆன்லைனில் விற்பனை செய்வதாக அண்மையில் தெரிவித்திருந்தார். மேலும் கைத்தறி, காஞ்சிபுரம், பனாரஸ் உள்ளிட்ட பல்வேறு வகையான புடைவைகள் இருப்பதாகவும் நியாயமான விலையில் அவை கிடைக்குமெனவும் கூறியிருந்தார். இது விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டது. ரசிகர்கள் பல கேள்விகளை எழுப்பியிருந்தனர். 

navya nair helped charity people with his saree sold

இதையடுத்து நவ்யா நாயர் விற்பனையை தொடங்கினார். அதன் மூலம் கிடைத்த லாபத்தை கேரள பத்தனாபுரத்தில் உள்ள காந்திபவனுக்கு நன்கொடையாக கொடுத்துள்ளார். அங்கு வசிப்பவர்களுக்கு புதிய ஆடைகள் மற்றும் பயனுள்ள பொருட்களை வாங்கிக் கொடுத்து அருகில் இருக்கும் காந்தி பவன் சிறப்பு பள்ளிக்கு ரூ.1 லட்சம் நன்கொடையையும் கொடுத்துள்ளார். இவரது செயல் தற்போது பாராட்டை பெற்று வருகிறது.