Skip to main content

பதவி இழக்கும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூ!

Published on 03/06/2021 | Edited on 03/06/2021

 

israel pm

 

இஸ்ரேலில் நீண்டகாலம் பிரதமராக இருந்து வருபவர் பெஞ்சமின் நேட்டன்யாஹூ. 90 களின் இறுதியில் முதன்முறையாக பிரதமரான இவர், 2009 முதல் தொடர்ந்து 12 வருடங்களாக பிரதமராக இருந்து வருகிறார். இந்தநிலையில் இரண்டு வருடங்களுக்கு முன்பு இஸ்ரேலில் பொதுத்தேர்தல் நடைபெற்றது.

 

அந்தத்தேர்தலில் பெஞ்சமின் நேட்டன்யாஹூவின் கட்சி அதிக இடங்களில் வென்றபோதும் பெரும்பான்மை பெற இயலவில்லை. இதனைத்தொடர்ந்து மேலும் மூன்று பொதுத்தேர்தல்கள் நடந்தன. இவ்வாறு இரண்டு வருடங்களில் நான்கு பொதுத்தேர்தல் நடைபெற்றும் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனையடுத்து பெஞ்சமின் நேட்டன்யாஹூ காபந்து பிரதமராக இருந்து வந்தார்.

 

இதனால் விரைவில் இஸ்ரேலில் மீண்டும் பொதுத்தேர்தலை நடத்தவேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால் திடீர் திருப்பமாக அந்தநாட்டின் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து அரசு அமைக்க முடிவு செய்துள்ள்ளன. எதிர்க்கட்சிகளின் ஒப்பந்தப்படி முக்கிய எதிர்க்கட்சி தலைவர்கள் இருவர் பிரதமர் பதவியை சுழற்சி முறையில் பகிர்ந்துகொள்ள உள்ளனர். அதாவது முதலிரண்டு ஆண்டுகள் நஃப்தாலி பென்னெட்  என்பவரும், அடுத்த இரண்டு வருடங்களுக்கு யெய்ர் லாப்பிட் என்பவரும் பிரதமர் பதவியை வகிக்க உள்ளனர். எதிர்க்கட்சிகள் அமைத்துள்ள இந்த கூட்டணி அடுத்த வாரம் கூட இருக்கும் அந்தநாட்டின் நாடாளுமன்றத்தில் தங்கள் பெருமான்மையை நிரூபிக்க வேண்டும். அப்போதே எதிர்க்கட்சிகள் ஆட்சியை அமைக்க முடியும். எதிர்க்கட்சிகள் ஆட்சி அமைக்கும் பட்சத்தில் நீண்டகால பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூ தனது பதவியை இழப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்