Skip to main content

சாப்பாடு ஆர்டர் செய்தவருக்கு 'சிறுநீர்' பாட்டில் பார்சல்! - அதிர்ச்சியில் வாடிக்கையாளர்!

Published on 23/02/2021 | Edited on 24/02/2021

 

bottle

 

உலகம் முழுவதும் கரோனா தாக்கம் குறைந்தபாடில்லை. பல நாடுகள் இன்னமும் கரோனாவுக்கு எதிராகப் போராடி வருகின்றன. பிரிட்டனில் கரோனா ஊரடங்கு இன்னமும் அமலில் இருப்பதால், பலரும் அங்கு ஆன்லைன் ஆர்டர் செய்துதான் உணவு எடுத்துக் கொள்கின்றனர். இந்நிலையில், பிரிட்டன்வாசி ஒருவர் கடந்த 21-ஆம் தேதி அன்று உணவை ஆர்டர் செய்துவிட்டு காத்திருந்தார். சிறிது நேரம் கழித்து, வந்த உணவைப் பிரித்துப் பார்த்தபோது அவருக்கு காத்திருந்தது பெரிய அதிர்ச்சி.

 

பிரிட்டனில் உள்ள புகழ்பெற்ற 'ஹலோ ஃபிரஷ்' எனும் உணவு டெலிவரி நிறுவனத்தில், ஆலிவர் மெக்மேனஸ் எனும் நபர் உணவு ஆர்டர் செய்துள்ளார். அப்போது அவருக்கு வந்த உணவுடன் 'கோக்' பாட்டிலில் சிறுநீர் நிரப்பப் பட்டிருந்தது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அந்த நபர், இதுகுறித்து ட்விட்டரில் அந்த நிறுவனத்தை டேக் செய்து கேள்வியெழுப்பியுள்ளார். அதில், "நான் மிகவும் எளிமையாகக் கேட்கிறேன். நான் ஏன் எனது உணவு ஆர்டருடன் யாரோ ஒருவரின் சிறுநீர் நிரப்பிய பாட்டிலைப் பெற்றேன். இதுகுறித்து உங்களுடைய பதிலுக்காகக் காத்திருக்கிறேன்’’ என்று குறிப்பிட்டு, அந்த 'கோக்' பாட்டில் புகைப்படத்தையும் பகிர்ந்திருந்தார். இது சமூக ஊடங்கங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதற்கு எதிராகப் பலரும் கருத்துத் தெரிவித்து வந்தனர். இதையொட்டி கருத்துத் தெரிவித்த ஹலோ ஃபிரஷ் நிறுவனம், "இதுகுறித்து நாங்கள் எவ்வளவு வருந்துகிறோம் என்பதை விவரிக்க வார்த்தைகள் இல்லை. தயவுசெய்து இதுகுறித்த செய்தியை அனுப்பினால், விரைவாக நடவடிக்கை எடுக்க உதவியாக இருக்கும்" எனத் தெரிவித்துள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உணவு விநியோகம் செய்யும் ஊழியர்களின் ஐடிகள் முடக்கம் (படங்கள்) 

Published on 24/05/2023 | Edited on 24/05/2023

 

ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உணவு விநியோகம் செய்யும் தனியார் நிறுவனத்தின்  ஊழியர்கள் கடந்த 22 ஆம் தேதி முதல் வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர். இது தொடர்பாக தமிழ்நாடு உணவு மற்றும் இதர பொருட்கள் விநியோகிக்கும் ஊழியர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ராமகிருஷ்ணா நேற்று (23.05.2023) செய்தியாளர்களிடம் கூறுகையில், "போராட்டத்தில் ஈடுபட்டுள்ள முக்கிய ஊழியர்களின் ஐடி-களை நிர்வாகம் முடக்கி உள்ளது. சென்னை மண்டலத்தில் 90 விழுக்காடு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் நிர்வாகம் தற்காலிக ஊழியர்களை  நியமித்தும் டெலிவரி வழங்க முடியவில்லை.

 

ஒரு ஆர்டருக்கு 20 ரூபாய் கூலி கொடுத்த நிர்வாகம் 100 ரூபாய் கொடுத்தாலும் புதிய ஊழியர்களால் டெலிவரி செய்ய முடியவில்லை. நிர்வாகத்திற்கு ஆதரவாக காவல்துறை செயல்படுகிறது. வேலை நிறுத்த நோட்டீஸ் கொடுத்து முறைப்படி வேலை நிறுத்தம் செய்கிறோம். ஆனாலும் நிர்வாகம் பேச்சுவார்த்தைக்கு வர மறுக்கிறது. எனவே தொழிலாளர் நலத்துறை இதில் தலையிட்டு தீர்வு காண வலியுறுத்துகிறோம்" எனக் கூறினார். 

 

 

Next Story

உணவு விநியோகிக்கும் ஊழியர்கள் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் (படங்கள்)  

Published on 09/03/2023 | Edited on 09/03/2023

 

சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் இன்று (09.03.2023) தமிழ்நாடு உணவு மற்றும் இதர பொருட்கள் விநியோகிக்கும் ஊழியர்கள் சங்கத்தினர் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், ஸ்விக்கி ஊழியர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திடவும், சட்ட சமூக பலன்களை பெற்றிட உறுதி செய்திடவும் வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.