Skip to main content

ஒரு கிலோ தக்காளி 50 லட்சம்...! குரல்வளையை நெறிக்கும் விலைவாசி...!!

Published on 01/09/2018 | Edited on 01/09/2018

 

PRICE


 

 

 

தென் அமெரிக்கா நாடான வெனிசுலா தற்போது பெரிய பொருளாதார சிக்கலை சந்தித்துள்ள நிலையில் அந்த நாட்டின் புது கரன்சி நோட்டுகளை அந்நாட்டு அதிபர் நிக்கோலஸ் மதுரோ வெளியிடவுள்ளார்.

 

தற்போது அங்கு பெரும் விலைவாசி உயர்வு ஏற்பட்டுள்ள  நிலையில் அத்தியாவசிய பொருட்கள் வாங்க மக்கள் எவ்வளவு பணத்தை செலவிட வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் குறிப்பிட்ட அத்தியாவசிய பொருள்களையும் அந்த பொருளை வாங்க கொடுக்க வேண்டிய பணத்தையும் அடுக்கி ஒருசேர படமெடுத்து விளக்கியுள்ளார் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் புகைப்படக்காரர் கார்லோஸ் கார்சியா ரவ்லிங்ஸ் என்பவர்.

 

  

அதன்படி பார்க்கையில் ஒரு கிலோ தக்காளியின் விலை ,மட்டும் 50 லட்சம் பொலிவார்கள். இரு கைப்பிடி அளவு கேரட்டுகளின் விலை 30 லட்சம் பொலிவார்கள். ஒரு கிலோ பாலாடைக்கட்டியின் விலை 75 லட்சம் பொலிவார்கள்.  வெனிசூலா தலை நகர் காரகாசில் 2.4 கிலோ கோழிக்கறி விலை 1.46 கோடி பொலிவார்கள். ஒரு கிலோ அரிசியின் விலை 25 லட்சம் பொலிவார்கள். அண்மையில் கழிப்பறைத் தாள் உருளை 26 லட்சம் பொலிவாருக்கு விற்கப்பட்டது. ஒரு கிலோ மாட்டுக்கறியின் விலை 95 லட்சம் பொலிவார்கள். குழந்தைகள் அணியும் ‘நேப்பிஸ்’ விலை 80 லட்சம் பொலிவார்கள். ஒரு பாக்கெட் சானிட்டரி நாப்கின்களுக்கு 35 லட்சம் பொலிவார்கள் செலவிட வேண்டியிருக்கும். தற்போது அங்கு புது நோட்டுகள் வெளியிடப்பட இருப்பதால் அங்குள்ள மக்கள் அத்தியாவசிய பொருட்களை வீட்டில் பதுக்கிவைத்து பாதுகாக்க தொடங்கியுள்ளனர். 

சார்ந்த செய்திகள்

 

Next Story

முரணாக பேசிய வடமாநில வாலிபர்! மூன்று வடமாநில இளைஞர்களை கைது செய்த காவல்துறையினர்!

Published on 31/07/2021 | Edited on 31/07/2021

 

Police arrest three North Indian youths

 

கோவை, கருமத்தம்பட்டியை அடுத்த சோமனூர் பகுதியில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வ நாகரத்தினம் உத்தரவின் பேரில், கருமத்தம்பட்டி போலீஸ் துணை சூப்பிரண்டு ஆனந்த ஆரோக்கியராஜ் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தீவிர தேடுதல் வேட்டையில் போலீசார் ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில் நேற்று (30.07.2021) சோமனூர் பகுதியில் கருமத்தம்பட்டி உதவி ஆய்வாளர் அழகேசன் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

 

அப்போது சந்தேகத்துக்கிடமான வகையில் இருசக்கர வாகனத்தில் வந்த வடமாநில வாலிபரை நிறுத்தி நடத்தப்பட்ட விசாரணையில், முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்தார். இதனையடுத்து அந்த நபர் இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த பையை சோதனையிட்டபோது, அதில் குட்கா பாக்கெட்டுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், அவன்  ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஜித்தேந்திரகுமார் என்பதும் சோமனூர் பகுதியில் உள்ள குடோனில் இருந்து விற்பனைக்காக கொண்டு செல்வதும் தெரியவந்தது. இதனையடுத்து அந்த நபரை அழைத்துக்கொண்டு அந்தக் குடோனுக்குச் சென்றனர்.

 

அங்கு பதுக்கிவைக்கப்பட்டிருந்த 550 கிலோ குட்கா மற்றும் பான் மசாலா பொருட்களைப் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில், அந்தக் குடோனை ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மகா சிவசக்தி ஜெனரல் ஸ்டோர் உரிமையாளர் வாடகைக்கு எடுத்து பயன்படுத்திவருவதும், மகா சிவசக்தி உரிமையாளர் மோதிலால் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு குட்கா பொருட்களைப் பதுக்கிவைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் உள்ளார் என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து அங்கு பணிபுரிந்துவரும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஜித்தேந்திர குமார் (24), உத்தம் குமார் (21), பிரேம் சிங் (20) ஆகிய மூவரையும் கருமத்தம்பட்டி காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

 

Next Story

ரயில்களில் தொடர்ந்து கைவரிசை காட்டிய பலே ஆசாமிகள் கைது...!

Published on 02/01/2020 | Edited on 02/01/2020

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை மார்க்கமாக செல்லும் ரயில்களில் குறிப்பாக கோவை-நீலகிரி எக்ஸ்பிரஸ், சென்னை டூ பெங்களூரு எக்ஸ்பிரஸ் சென்னையிலிருந்து மைசூர் செல்லும் காவேரி எக்ஸ்பிரஸ் ரயில்களில் தொடர்ச்சியாக கொள்ளை நடந்து வந்துள்ளது. இதுதொடர்பாக ரயில்வே காவல்நிலையங்களில் புகார்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. இதனையடுத்து ரயில் கொள்ளையர்களை பிடிக்க ஜோலார்பேட்டை மார்கமாக செல்லும் ரயில்களில் ரயில்வே போலீஸார் தனிப்படை அமைத்து கண்காணிப்பில் ஈடுப்பட்டனர்.

 

Northern-state-thiefs-arrested in Tiruppattur

 இந்த கண்காணிப்பில் ரயில்களில் தொடர்ச்சியாக பயணம் செய்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 21 வயதான தீப்ஜோதி, 26 வயதான சஞ்சுராய் ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்களில் ரயிலில் கொள்ளையடிப்பவர்கள் என தெரியவந்துள்ளது. தொடர்ந்து அவர்களை விசாரித்ததில், அதே மாநிலத்தை சேர்ந்த 23 வயதான கிஷோர், அமர்ஜோதிபோரா ஆகியோருக்கும் தொடர்பிருப்பது தெரிவந்தது. 

இதையடுத்து அவர்களை கைது செய்த காவல்துறையினர், அவர்களிடம்மிருந்து 11 சவரன் தங்க நகை, 9 செல்போன்கள், 30 ஆயிரம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களை திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.