அமெரிக்காவில் அகாசிகோ பகுதியை சேர்ந்தவர் ஜேமி. இவர் சில தினங்களுக்கு முன்பு டகோமா நாரவ்ஸ் என்ற பகுதியில் நடந்த மீன் பிடிக்கும் போட்டியில் கலந்து கொண்டிருந்திருக்கிறார். அப்போது அவரது வலையில் ஒரு குட்டி ஆக்டோபஸ் சிக்கியிருக்கிறது. அதை வைத்து போட்டோ எடுக்க ஆசைப்பட்ட ஜேமி அதை தன்னுடைய முகத்தின் மேல் விட்டிருக்கிறார்.

ac

முதலில் முகத்தின் மேல் மெல்ல பரவிக்கொண்டிருந்த ஆக்டோபஸ் திடீரென அவரை கடித்து குதற ஆரம்பித்திருக்கிறது. அதிர்ச்சியடைந்த அவர் அந்த ஆக்டோபஸை முகத்திலிருந்து பிடுங்க முயற்சித்திருக்கிறார். ஆனால் அது விடாபிடியாக பிடித்துக் கொண்டிருந்திருக்கிறது. நீண்ட நேர முயற்சிக்கு பிறகு அதை முகத்திலிருந்து பிரித்து எடுத்திருக்கிறார். முகத்தில் கடும் காயம் ஏற்பட்டதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.