kp sharma oli

நேபாளநாட்டைச்சேர்ந்தவர்கே.பி.சர்மா ஒலி. ஆளும்நேபாளகம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தஇவருக்கும், நேபாளநாட்டின்முன்னாள் பிரதமர் புஷ்பகமல்தஹாலுக்கும் அதிகாரப் போட்டி நடந்துவந்தது.அதன்தொடர்ச்சியாக இருவருக்கும் இடையேயான மோதல், அவசரச் சட்டம் விவகாரம் ஒன்றில் பெரிதாக வெடித்தது. இதனைத்தொடர்ந்து, பிரதமர்கே.பி.சர்மா ஒலி நாடாளுமன்றத்தைக் கலைத்தார். இது புஷ்பகமல்தஹால்குழுவுக்குஅதிருப்தியை ஏற்படுத்தியது.

Advertisment

இதனையடுத்து, புஷ்பகமல்தஹால்தலைமையில்அவரதுஆதரவாளர்கள் கூட்டம்கூடி, பிரதமர்கே.பி.சர்மா ஒலியை, நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின்தலைவர் பதவியிலிருந்து நீக்குவதாக அறிவித்தது. அதேநேரத்தில்நேபாள நாட்டு உச்சநீதிமன்றம், நாடாளுமன்றத்தைக் கலைத்தது செல்லாது என அறிவித்தது.

Advertisment

இந்தநிலையில் ஆட்சியையும், அதிகாரத்தையும் கைப்பற்றும் பொருட்டு, நேபாள நாடாளுமன்றத்தில் கே.பி.சர்மா ஒலி இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தினார். ஆனால் இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் கே.பி.சர்மா ஒலி தோல்வியடைந்தார். 93 பேர்கே.பி.சர்மா ஒலிக்கு ஆதரவாகவும், 124 எதிராகவும் வாக்களித்தனர். 15 பேர் நடுநிலை வகித்தனர். நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்ததால், கே.பி.சர்மா ஒலி தலைமையிலான ஆட்சி கவிழ்ந்துள்ளது. இதனைத் தொடர்ந்து கே.பி.சர்மா ஒலி, தனது பதவியைராஜினாமா செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.