Turkmenistan leader and alabai dog

Advertisment

மத்திய ஆசியநாடானதுர்க்மெனிஸ்தானின் அதிபராககுர்பங்குலி பெர்டிமுகமடோவ் இருந்து வருகிறார். இவர் பாரம்பரிய நாய் வகையானஅலபாய்நாய் வகைகளைமிகவும் நேசிக்கிறார். பொதுவாக மத்திய ஆசியஷெப்பர்ட் என்றழைக்கப்படும் இந்த நாய் வகைகளைஅந்த நாட்டில் சர்வசாதாரணமாக காணலாம்.

இந்த அலபாய்நாய் வகைகள்குறித்துஏற்கனவே புத்தகம் மற்றும் பாடல் எழுதியுள்ள துர்க்மெனிஸ்தானின் அதிபர், கடந்த காலங்களில் இந்த நாய் குட்டிகளை ரஷ்யஅதிபர் புதினுக்கும்,ரஷ்ய பிரதமர் டிமிட்ரி மெட்வெடேவுக்கும் பரிசளித்துள்ளார்.

மேலும் கடந்த ஆண்டு இந்த நாய் வகைக்கு, அந்த நாட்டின் தலைநகரில்50 அடியில்தங்க முலாம் பூசப்பட்டசிலைஒன்றையும் திறந்து வைத்துள்ள துர்க்மெனிஸ்தானின் அதிபர், தற்போது இந்த நாய் வகைகளைக் கவுரவிக்கும்விதத்தில், ஏப்ரல் மாதம் கடைசிஞாயிறு அன்று தேசியவிடுமுறை விடப்படும் எனஅறிவித்துள்ளார்.

Advertisment

நன்றியுள்ள ஜீவன் மீது அதிபர் காட்டும்பாசம் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.