நிலவில்கால்வைத்துவிட்ட மனிதன், அதனைப் பகுதிகளாக பிரித்து விற்பனை செய்யவும் தொடங்கிவிட்டான். ஆயினும் நிலவு தொடர்பான ஆராய்ச்சிகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. அதேவேளையில் மனிதன், செவ்வாய் கிரகத்தைஆராயும்வேலைகளிலும் ஈடுபட்டு வருகிறான்.
அவ்வாறு செய்வாய்கிரகத்தை ஆராய்ந்துவரும் விஞ்ஞானிகளுக்கு, முக்கியமான கேள்வியாக இருப்பதுசெவ்வாய் கிரகத்தில் உயிர்கள் இருக்கிறதா, இல்லையா என்பதே. இந்தநிலையில் அமெரிக்கவிண்வெளி ஆய்வு நிறுவனம் நாசா, கடந்த வருடம் விண்கலம் ஒன்றைசெவ்வாய் கிரகத்திற்கு அனுப்பியுள்ளது. அதில்பெர்சவரன்ஸ் என்ற விண்ணூர்தி (ரோவர்) அனுப்பப்பட்டுள்ளது. இந்தநிலையில் நாளை (18.02.2021), அந்த விண்ணூர்தியை செவ்வாய் கிரகத்தில் தரையிறக்கும் முயற்சியைமேற்கொள்ளப்போவதாக நாசா அறிவித்துள்ளது. இந்த விண்ணூர்தி மூலம், அங்கு உயிர்கள் இருக்கிறதா எனகண்டறிய வாய்ப்பு ஏற்படும்.
இதனிடையே நாசாவிண்வெளிக்குமனிதர்களை அனுப்பும் ஆராய்ச்சிலும் ஈடுபட்டுள்ளது. தற்போது செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்படும் விண்வெளி வீரர்கள் சாப்பிடுவதற்கான உணவு முறையையும், அதன் தொழில்நுட்பத்தையும் கண்டுபிடிப்பதற்கான போட்டி ஒன்றை நாசா அறிவித்துள்ளது. இப்போட்டியில் பங்குபெற்று விண்வெளி வீரர்கள் சாப்பிடுவதற்கானஉணவு முறையையும், தொழில்நுட்பத்தையும் கண்டுபிடிப்பவர்களுக்கு இந்தியமதிப்பில் 3.6 கோடி ரூபாய் பரிசளிக்கப்படும். அதுமட்டுமின்றி செவ்வாய்க்குச் செல்லும்விண்வெளி வீரர்களுக்கு உணவு சமைக்கஅவர்கள் பயன்படுத்தப்படுவார்கள் எனவும்நாசா அறிவித்துள்ளது.