Skip to main content

குப்பைகள் மூலம் ஒரு ஒத்துழையாமை இயக்கம்; அச்சுறுத்தும் இராணுவம் - அமைதி வழியில் மக்கள்!

Published on 30/03/2021 | Edited on 30/03/2021

 

garbage strike myanmar

 

மியான்மர் நாட்டில் இராணுவப் புரட்சி ஏற்பட்டு, ஆங் சான் சூகி உள்ளிட்டோர் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். மேலும், அந்த நாட்டில் ஒரு வருடத்திற்கு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இராணுவ ஆட்சிக்கு எதிராக அந்த நாட்டில் மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. ஜனநாயக ஆட்சியை வலியுறுத்தியும், கைது செய்யப்பட்ட ஆங் சான் சூகி உள்ளிட்ட தலைவர்களை விடுவிக்குமாறும் மியான்மரில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்கள் மீது, மியான்மர் இராணுவம் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இத்தாக்குதல்களில் பலியாகும் மக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த சனிக்கிழமை மட்டும் மியான்மர் இராணுவத்தினர் போராட்டக்கார்கள் மீது நடத்திய தாக்குதலில் 114 பேர் பலியாகினர். இதற்கு அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான் உள்ளிட்ட 12 நாடுகளின் இராணுவ தளபதிகள் இணைந்து கண்டனம் தெரிவித்தனர். அமெரிக்க அதிபர் ஜோ பைடன், மியான்மர் இராணுவத்தின் தாக்குதல் மூர்க்கத்தனமானது என்றும், தனக்கு கிடைத்த அறிக்கையின் அடிப்படையில், ஏராளமான மக்கள் தேவையில்லாமல் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் மியான்மர் இராணுவம் மீது, பொருளாதார தடைகளை விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

 

இந்தநிலையில், மியான்மர் இராணுவம், அந்த நாட்டின் மேற்கு எல்லையில் போராளி குழுவின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் விமான தாக்குதல் நடத்தியது. இதனால் அப்பகுதியிலிருந்து சுமார் 3000 பேர் தாய்லாந்து நாட்டில் தஞ்சம் புகுந்துள்ளதாக மியான்மர் நாட்டைச் சேர்ந்த பெண்கள் அமைப்பு ஒன்று அறிக்கை வெளியிட்டுள்ளது.

 

மியான்மர் இராணுவத்தின் கொடூர தாக்குதலுக்கு மத்தியிலும், மியான்மர் மக்களின் போராட்டம் தொடர்ந்து வருகிறது. நேற்றும் (29.03.2021) மியான்மரில் போராட்டக்கார்கள் மீதான தாக்குதல் நீடித்தது. போராட்டத்தில் ஈடுபட்ட 510க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக அந்த நாட்டிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், இராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் ஒத்துழையாமை இயக்கத்தை கையில் எடுத்துள்ளனர். மியான்மர் மக்கள், முக்கியமான வீதிகளில் குப்பைகளைக் கொட்டி, இராணுவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அச்சுறுத்தும் இராணுவத்திற்கு முன் இந்த அமைதி வழி போராட்டம், தாக்கத்தை ஏற்படுத்துமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஹெலிகாப்டர்கள் மோதி விபத்து; 10 பேர் பலி!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Malaysia Military Helicopter incident 

இரு ஹெலிகாப்டர்கள் மோதிய விபத்தில் 10 பேர் பலியான சம்பவம் மலேசியாவில் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

மலேசியா தலைநகர் கோலாலம்பூர் அருகே உள்ள லுமித் நகரத்தின் வின் பெரக் பகுதியில்   இரு ராணுவ ஹெலிகாப்டர்கள் நடுவானில் கடற்படை ஒத்திகைக்காக பயிற்சியில் ஈடுபட்டிருந்தன. இத்தகைய சூழலில் எதிர்பாராத விதமாக இரு ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின. இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி பார்ப்போரை பதைபதைக்க வைக்கின்றன.

இந்த விபத்தில் 10 பேர் பலியானதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மலேசிய நாட்டின் கடற்படை தினத்தின் 90 ஆம் ஆண்டு நிகழ்ச்சிக்காக நடந்த ஒத்திகையின்போது இந்த கோர விபத்து நிகழ்ந்ததாகக்  கூறப்படுகிறது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. 

Next Story

சென்னையில் ரூ. 280 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்! 

Published on 22/12/2023 | Edited on 22/12/2023
worth Rs 280 crore seized in Chennai

சென்னையில் ரூ. 280 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையைச் சேர்ந்த உதயகுமார் என்பவர் கடந்த 10 ஆம் தேதி முதல் சென்னையில் உள்ள தனியார் விடுதியில் தங்கி இருந்துள்ளார். இந்த சூழலில் அவர் போதைப்பொருள் கடத்த இருப்பதாகப் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்தப் புகாரின் பேரில் மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் சம்பந்தப்பட்ட தனியார் விடுதியில் உதயகுமார் தங்கியிருந்த அறையில் சோதனை மேற்கொண்டு அவரிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது பெரம்பூரில் உள்ள அக்பர் அலி என்பவர் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ. 280 கோடி மதிப்புள்ள 56 கிலோ போதைப்பொருளை மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், போதைப்பொருளை மியான்மரில் இருந்து மணிப்பூர் வழியாக இலங்கைக்கு கடந்த முயன்றது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.