Skip to main content

மொராக்கோ நிலநடுக்கம்; மிரள வைக்கும் உயிரிழப்பு எண்ணிக்கை

Published on 09/09/2023 | Edited on 09/09/2023

 

Morocco Earthquake; 1,037 people lost their lives

 

மொராக்கோ நாட்டின் மாரேஷ் என்ற பகுதியில் இன்று அதிகாலை 03.14 மணிக்கு கடந்த 120 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டேர் அளவுகோலில் 6.8 என்ற அளவில் பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட அதிர்வுகளால் பழமையான கட்டடங்கள், குடியிருப்பு கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளன. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகளால் சுமார் 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. மேலும் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. இதையடுத்து மொராக்கோவில் அடுத்தடுத்து 6 முறை சிறிய அளவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் மக்கள் மிகவும் அச்சமடைந்துள்ளனர்.

 

இடிபாடுகளில் பொதுமக்கள் சிக்கி முதற்கட்டமாக  632 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகிய நிலையில், தற்பொழுது உயிரிழப்பு எண்ணிக்கை 1037 ஆக அதிகரித்துள்ளது. 1000க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். இடிபாடுகளில் மக்கள் சிக்கியுள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. தொடர்ந்து மீட்புப் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

செங்கல்பட்டில் லேசான நிலநடுக்கம்!

Published on 08/12/2023 | Edited on 08/12/2023
Mild earthquake in Chengalpattu

செங்கல்பட்டு மற்றும் ஆம்பூர் அருகே லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

செங்கல்பட்டு பகுதியை மையமாக கொண்டு மிகவும் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 3.2 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சரியாக காலை 7.39 மணியளவில் பூமிக்கு அடியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

அதே சமயம் தற்போது கர்நாடகா மாநிலம் விஜயபுராவிலும் நில அதிர்வுகள் உணரப்பட்டு இருப்பதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அண்மை காலமாக வடமாநிலங்களில் ஏற்பட்டிருந்த நில அதிர்வுகள் தற்போது, தென்மாநிலங்களான தமிழ்நாட்டின் செங்கல்பட்டு, கர்நாடகாவின் விஜயபுரா ஆகிய இடங்களிலும் உணரப்பட்டுள்ளது. 

Next Story

பிலிப்பைன்ஸில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

Published on 02/12/2023 | Edited on 02/12/2023

 

A powerful earthquake in the Philippines

 

பிலிப்பைன்ஸ் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் அங்குள்ள மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

 

பிலிப்பைன்ஸின் மிண்டோனா என்ற பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 7.5 ஆக பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கத்தால் அந்த பகுதியில் உள்ள கட்டிடங்கள் அனைத்தும் குலுங்கின. இதனால், அங்கிருந்த மக்கள் அனைவரும் அச்சம் அடைந்துள்ளனர். 

 

இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து பிலிப்பைன்ஸ், ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் இந்தோனேசியாவுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸில் கடந்த மாதம் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அங்கு 8 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.