Skip to main content

குட்டி பைக்கில் வந்து குழந்தையை தாக்கிய குரங்கு... வைரலாகும் வீடியோ!

Published on 05/05/2020 | Edited on 05/05/2020
hj


தெருவில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை குட்டி பைக்கில் வந்த குரங்கு ஒன்று தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகில் தினமும் எவ்வளவோ வினோத சம்பவங்கள் நடைபெறுகின்றது. ஆனால் இன்று இந்தோனேஷியாவில் நடைபெற்ற ஒரு சம்பவம் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

 


இந்தோனேஷியாவின் சரேயா நகரில் உள்ள ஒரு குறுகலான தெரு ஒன்றில் இன்று குழந்தைகள் கூட்டமாக விளையாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது குட்டி பைக்கில் அங்கு வந்த குரங்கு ஒன்று ஒரு குழந்தையின் காலை பிடித்துக்கொண்டு இழுத்து சென்றது. சுமார் 15 அடிக்கு மேலாக குழந்தையை அந்த குரங்கு தரதரவென்று இழுத்து சென்றது. குழந்தையின் அழுகுரலை கேட்ட அப்பகுதி மக்கள் அலறி அடித்துக்கொண்டு வந்து அந்த குரங்கை துரத்தியுள்ளனர். பெரியவர்களை பார்த்த அந்த குரங்கு குழந்தையை அங்கேயே போட்டுவிட்டு ஓடிவிட்டது. இந்த சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. 
 

சார்ந்த செய்திகள்