/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th_4492.jpg)
குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர் பாவேஷ் ஷா. இவர் ஜெர்மனியில் மென்பொருள் பொறியாளராகப்பணியாற்றி வருகிறார். இவருக்கு தாரா ஷா என்ற பெண்ணுடன் திருமணமாகி, 2 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் இவர்களது மகள் 7 மாதக் குழந்தையாக இருக்கும் போது ரத்தப் போக்கு ஏற்பட்டதால் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அப்போது, அந்த குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர், குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாகத்தெரிவித்தார். அதனுடன், அந்த நாட்டின் சட்டப்படி அவர் குழந்தைகள் பாதுகாப்புக்குழுவுக்கும் தகவல் அளித்தார். அதன் அடிப்படையில், கடந்த 2021 ஆம் ஆண்டு அரசின் குழந்தை நலக் காப்பகத்துக்குக் குழந்தை அனுப்பப்பட்டது.
அதனைத்தொடர்ந்து, அந்த குழந்தையின் பெற்றோர்தங்களுடைய குழந்தையை ஒப்படைக்குமாறு நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார்கள். ஆனால், அந்த மனுவை ஜெர்மனி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கடந்த 20 மாதங்களுக்கு மேலாகக் குழந்தையை மீட்கப் பெற்றோர் சட்டப் போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில், குழந்தையை அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கக் கோரி ஜெர்மனியில் உள்ள பிராங்க்பர்ட்டில் இந்தியவம்சாவளியினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி தலையிட வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்தனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)