Modi-Elon Musk meeting

அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி தற்பொழுது தொழிலதிபர் எலான் மாஸ்கை சந்தித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி இன்று நள்ளிரவு 2:30 மணியளவில் அமெரிக்காவில் மீண்டும் அதிபராகபதவியேற்றிருக்கும் டிரம்பை சந்திக்க உள்ளார். இந்நிலையில் ட்ரம்பை சந்திப்பதற்கு முன்னால் வாஷிங்டனில் தொழிலதிபர் எலான் மஸ்க்குடன் மோடி சந்திப்பு நடத்தியுள்ளார். இந்த சந்திப்புக்கு பிறகு டிரம்பை பிரதமர் மோடி சந்தித்து ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார்.

Advertisment

எலான் மஸ்க்கை தொடர்ந்து இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொழிலதிபரான விவேக் ராமசாமியையும் பிரதமர் மோடி சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அமெரிக்க அதிபரின் விருந்தினர் மாளிகையில் இந்த சந்திப்பு நடைபெற்று வருகிறது.