Skip to main content

90ஸ் கிட்ஸ்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி...

Published on 25/04/2019 | Edited on 25/04/2019

முதன்முறையாக பள்ளிகளில் கணினியை ஒரு பாடமாக பயின்றவர்கள் 90ஸ் கிட்ஸாகத்தான் இருக்கும். அப்படிப்பட்ட 90ஸ் கிட்ஸ் குழந்தை பருவத்தில் பெரும் சாதனையாகவும், தங்கள் திறமையை காட்டும் செயலாகவும் கருதியது எம்.எஸ் பெயிண்ட் மென்பொருளில் படங்கள் வரைந்து அதனை மற்றவர்களுடன் பகிர்வதை தான்.

 

microsoft confirms ms paint is available in upcoming windows too

 

 

இன்று வரை பல 90ஸ் கிட்ஸ் எம்.எஸ் பெயிண்ட் மென்பொருளை பொழுதுபோக்காக பயன்படுத்துவத்துண்டு. அப்படிப்பட்ட எம்.எஸ் பெயிண்ட் மென்பொருளை 2017 ஆம் ஆண்டு நிறுத்தப்போவதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்தது. இதற்கு பலத்த எதிர்ப்பு ஏற்பட்டதை அடுத்து அந்த முடிவை திரும்ப பெற்றது.

இந்நிலையில் தற்போது வரும் விண்டோஸ் 10 ன் புதிய அப்டேட்டில் இந்த எம்.எஸ். பெயிண்ட் நீக்கப்படலாம் என கூறப்பட்டு வந்தது. இது குறித்து தற்போது அதிகாரபூர்வமாக அறிவித்துள்ள மைக்ரோசாப்ட் நிறுவனம் எம்.எஸ் பெயிண்ட் புதிய விண்டோஸிலும் தொடரும் எனவும், தற்போதைக்கு அதனை நீக்கும் எண்ணம் இல்லை எனவும் அறிவித்துள்ளது. மைக்ரோசாப்ட்டின் இந்த அறிவிப்பை பல 90ஸ் கிட்ஸ் மகிழ்ச்சியுடன் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

சீராகி வரும் விமான சேவை; மீண்டும் வழக்கமான முறையில் போர்டிங் பாஸ்!

Published on 20/07/2024 | Edited on 20/07/2024
Boarding pass at airport as normal again!

உலகம் முழுவதிலும் உள்ள பல்வேறு பகுதிகளில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக விண்டோஸ் (Windows) மென்பொருள் முடங்கியுள்ளது. பொதுவாகக் கணினி மற்றும் மடிக்கணினி ஆகியவற்றை சைபர் குற்றங்களில் இருந்து பாதுகாக்க சைபர் செக்யூரிட்டி தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த சைபர் செக்கியூரிட்டி தொழில் நுட்பங்களை பல்வேறு நிறுவனங்கள் உருவாக்கி வழங்கி வருகிறது.

அந்த வகையில் அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சைபர் செக்கியூரிட்டி நிறுவனமான கிரவுட்ஸ்டிரைக்(CrowdStrike) நிறுவனம் நேற்று வெளியிட்ட புதிய அப்டேட்டில் ஏற்பட்டுள்ள மாறுதல்களால் மைக்ரோசாஃப்ட் சேவைகள் முடங்கியுள்ளன என்று கூறப்படுகிறது. கணினிகளில் பாதுகாப்பிற்காக பால்கன் எனப்படும் சென்சார் அடிப்படையிலான முக்கிய சாஃப்ட்வேரை கிரவுட்ஸ்டிரைக் உருவாக்கி இருந்த நிலையில் அதனை விண்டோஸ் அப்டேட்டில் இணைத்தபோது சென்சார் செயலிழந்து புளூ ஸ்க்ரீன் எரர் வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தகவல் தொழில்நுட்பத் துறை, வங்கி, விமானம், ரயில், ஊடகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சேவைகளில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சில நாடுகளில் பங்குச் சந்தைகள் மற்றும் வங்கிகள் முடங்கின.

மேலும், இதன் காரணமாக சென்னை, டெல்லி, மும்பை உள்ளிட்ட உலகம் முழுவதும் நேற்று இருந்து விமான சேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. மதுரை, திருவனந்தபுரம், பாட்னா, ஹைதராபாத், கோவை, பெங்களூர், லக்னோ, மும்பை போன்ற பகுதிகளுக்கு சென்னையில் இருந்து செல்லும் விமானங்களின் நேற்று சேவை இரண்டு மணி நேரத்திற்கு மேலாக தாமதமாகியுள்ளது. இந்த சூழலில் அடுத்த கட்டமாக பயணம் மேற்கொள்வதற்கு பயணிகள் தொடர்ச்சியாக நீண்ட வரிசையில் நின்றும், விமான நிலைய அதிகாரிகள் செக் இன் படிவங்கள் கையால் எழுதிக்கொடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 

விண்டோஸ் மென்பொருளின் சேவை சீராகி வருவதால், தற்போது சென்னை, மதுரை உள்ளிட்ட விமான நிலையங்களில் வழக்கமான முறைப்படி போர்டிங் பாஸ் வழங்கப்பட்டு வருகிறது. இன்று பிற்பகலுக்குள் விமானச் சேவை முற்றிலுமாக சீராகும் என விமான போக்குவரத்துத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

Next Story

உலகையே முடக்கிய தொழில்நுட்ப கோளாறு; மன்னிப்பு கேட்ட நிறுவனம்!

Published on 20/07/2024 | Edited on 20/07/2024
Crowdstrike apologizes for Windows software glitch

உலகம் முழுவதிலும் உள்ள பல்வேறு பகுதிகளில் விண்டோஸ் (Windows) மென்பொருள் முடங்கியுள்ளது. இதனால் தகவல் தொழில்நுட்பத் துறை, வங்கி, விமானம், ரயில், ஊடகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சேவைகளில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சில நாடுகளில் பங்குச் சந்தைகள் மற்றும் வங்கிகள் முடங்கின.

பொதுவாகக் கணினி மற்றும் மடிக்கணினி ஆகியவற்றை சைபர் குற்றங்களில் இருந்து பாதுகாக்க சைபர் செக்யூரிட்டி தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த சைபர் செக்கியூரிட்டி தொழில் நுட்பங்களை பல்வேறு நிறுவனங்கள் உருவாக்கி வழங்கி வருகிறது. அந்த வகையில் அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சைபர் செக்கியூரிட்டி நிறுவனமான கிரவுட்ஸ்டிரைக்(CrowdStrike) நிறுவனம் நேற்று வெளியிட்ட புதிய அப்டேட்டில் ஏற்பட்டுள்ள மாறுதல்களால் மைக்ரோசாஃப்ட் சேவைகள் முடங்கியுள்ளன என்று கூறப்படுகிறது.

கணினிகளில் பாதுகாப்பிற்காக பால்கன் எனப்படும் சென்சார் அடிப்படையிலான முக்கிய சாஃப்ட்வேரை கிரவுட்ஸ்டிரைக் உருவாக்கி இருந்த நிலையில் அதனை விண்டோஸ் அப்டேட்டில் இணைத்தபோது சென்சார் செயலிழந்து புளூ ஸ்க்ரீன் எரர் வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறுக்கு  கிரவுட்ஸ்ட்ரைக் (CrowdStrike) நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது. இந்த நிறுவனத்தின் தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இது சைபர் தாக்குதல் இல்லை விரைந்து சிக்கலைக் கண்டறிந்து தீர்வு காண்பதற்கான பணிகளை செய்துவருகிறோம் என உறுதியளித்துள்ளார். மேலும் அனைத்து கணினி மற்றும் மடிக்கணினிகளை மீட்டெடுக்க வாடிக்கையாளர்களுடன் சேர்ந்து பணியாற்றி வருவதாகவும் தெரிவித்திருக்கிறது. 

இது தொடர்பாக மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சத்யா நாதெல்லா வெளியிட்டுள்ள பதிவில், கிரவுட்ஸ்ட்ரைக்  நிறுவனம் வெளியிட்டுள்ள அப்டேட் காரணமாகத்தான் உலகளவில் தகவல் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. இந்த சிக்கலுக்குத் தீர்வு காணும் வகையில் பணியாற்றி வருகிறோம். வாடிக்கையாளர்களின் ஆன்லைன் இயக்கத்தை மீட்டெடுக்கும் வகையில் கிரவுட்ஸ்ட்ரைக்  நிறுவனத்துடன் சேர்ந்து மைக்ரோசாஃப்ட் நிறுவனம் இயங்கி வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள இந்த தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் பங்குகள் வீழ்ச்சியடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.