உக்ரைனின் முக்கிய நகரமான மரியுபோலை ரஷ்யா கைப்பற்றியது.
உக்ரைன் தலைநகரான கீவ் பகுதியில் இருந்து பின்வாங்கிய ரஷ்ய படைகள் கிழக்கு நோக்கி முன்னேறிவந்த நிலையில், கிழக்குப்பகுதியில் அமைந்துள்ள முக்கிய நகரமான மரியுபோலை ரஷ்யா இன்று கைப்பற்றியது. மரியுபோல் பகுதியில் ரஷ்யா கடுமையான தாக்குதலை நடத்திவந்த நிலையில், தற்போது மொத்த நகரமும் ரஷ்யாவின் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது.
மரியுபோல் பகுதியை கைப்பற்றியதையடுத்து ரஷ்ய வீரர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்த அதிபர் புதின், மரியுபோல் நகருக்கு உக்ரைனிடமிருந்து விடுதலை கிடைத்திருப்பதாகவும் தெரிவித்தார்.