Skip to main content

மங்களூரு குக்கர் குண்டு வெடிப்பு; ஐ.எஸ். பயங்கரவாதிகளின் தொடர்பில் ஷரீக்; விசாரணையில் அதிர்ச்சி

Published on 22/11/2022 | Edited on 22/11/2022

 

 Mangalore cooker incident; Shariq in relation to IS terrorists; Shocked at the trial

 

கர்நாடகா மாநிலத்தின் கடலோரப் பகுதியில் அமைந்துள்ள மங்களூருவில் 19/11/2022 அன்று மாலை ஒரு ஆட்டோ திடீரென வெடித்துச் சிதறியது. ஆட்டோவில் இருந்த இரண்டு பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

 

இந்தச் சம்பவம் தொடர்பாக கர்நாடகா மாநிலக் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதேபோல், தேசிய புலனாய்வு துறையின் அதிகாரிகளும் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

இது குறித்து கர்நாடக டிஜிபி பிரவீன் சூட் தனது ட்விட்டர் பக்கத்தில், "இப்போது உறுதியாகி விட்டது. நேற்று நடந்த ஆட்டோ வெடிப்பு எதிர்பாராத விதமாக நடந்த வெடி விபத்து இல்லை. கடுமையான சேதத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் நடந்த 'பயங்கரவாதச் செயல். இந்த விவகாரத்தில் கர்நாடக மாநிலக் காவல்துறையினர், மத்திய அமைப்புகளுடன் இணைந்து இது குறித்து விசாரணை நடத்தி வருகிறது" என்று பதிவிட்டுள்ளார்.

 

சம்பவம் நடந்த இடத்தில் இருந்து தடயவியல் துறையினர் முக்கிய ஆதாரங்கள் சேகரித்தனர். அங்கு ஆட்டோவுக்குள் எரிந்த நிலையில், குக்கர் ஒன்றும் சில பேட்டரிகளும் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் காரணமாக அங்குப் பதற்றமான சூழல் உருவாகியதை அடுத்து அப்பகுதி முழுவதையும் காவல்துறையினர் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். 

 

சம்பந்தப்பட்ட ஆட்டோவில் பயணித்த ஷரீக்கிற்கு நீலகிரி மாவட்டம் உதகையைச் சேர்ந்த சுரேந்திரன் என்பவர் சிம்கார்டு வாங்கிக் கொடுத்தது விசாரணையில் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து, அந்த நபரைப் பிடித்து தமிழகக் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ஷரீக் நாகர்கோவிலில் துரித உணவகத்தில் வேலை பார்க்கும் அஜிம் ரகுமான் என்பவருடன் செல்போனில் பேசியது தெரிய வந்தது. ஷரீக் மற்றும் அஹிம் ரகுமான் இடையே ஏற்கனவே தொடர்பு உள்ளதா என்றும் செல்போனில் என்ன பேசி இருப்பார்கள் என்பது குறித்தும் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

 

மேலும், என்ஐஏ அதிகாரிகளின் விசாரணையில் ஷரீக் ஐஎஸ் பயங்கரவாதிகளுடன் நேரடித் தொடர்பில் இருப்பது தெரிய வந்துள்ளது. அவர் குக்கர் வெடிகுண்டுடன் வீடியோக்களை வெளியிட்டு பயங்கரவாதத்திற்கு ஆதரவாக பேசியது தெரியவந்துள்ளது. குண்டு வெடிப்பிற்கு முன்னதாக ஷரீக் ஒத்திகை பார்த்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

“குக்கர் மாதிரிதானே அவருடைய முகமும் குண்டா இருக்கு” - டிடிவி தினகரன் மனைவி கலகல பேச்சு!

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
His face is chubby like a cooker tTV Dhinakaran's wife's speech

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அந்த வகையில் தேனி நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் தங்க தமிழ்ச்செல்வன். அதிமுக சார்பில் நாராயணசாமி, பாஜக கூட்டணி சார்பில் அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன், நாம் தமிழர் கட்சி சார்பில் மதன் உட்பட நான்கு முனை போட்டியுடன் சுயேட்சைகளும் களமிறங்கி தேர்தல் களத்தில் வலம் வருகிறார்கள். அதே சமயம் பாஜக கூட்டணி சார்பில் களம் இறங்கியுள்ள டி.டி.வி தினகரன் தேனி தொகுதியில் பல இடங்களில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். மேலும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்காக தமிழகத்தில் பல பகுதிகளில் டிடிவி பிரச்சாரம் செய்யப்போவதாகவும்,  எனது மனைவியும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவார் என்றும் சொல்லி இருந்தார். 

His face is chubby like a cooker tTV Dhinakaran's wife's speech

அதன் அடிப்படையில் தான் டிடிவி தினகரன் மனைவி அனுராதா தனது கணவருக்காக தேனி பாராளுமன்ற தொகுதியில் உள்ள பல பகுதிகளில் தேர்தல் களத்தில் வாக்காளர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். அதன்படி மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக அவரது மனைவி அனுராதா வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டபோது, “குக்கர் சின்னத்தை எல்லோரிடத்திலும் கொண்டு செல்லுங்கள். சின்னத்தில் குழப்பம் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மற்றவருக்கும் சின்னத்தை எடுத்து சொல்லுங்கள். ஏனென்றால் இதற்கு முன் போட்டியிட்டபோது வேறொரு சின்னத்தில் டிடிவி தினகரன் போட்டியிட்டதால் இதை சொல்கிறேன். குக்கர் மாதிரிதானே அவருடைய முகமும் குண்டா இருக்கு”என கலகலப்பாக பேசி வாக்கு சேகரித்தார்.

Next Story

கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு; 70 பேர் உயிரிழப்பு

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
 Indiscriminate shooting; 70 people lost their lives

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 70 பேர் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த தாக்குதல் சம்பவத்திற்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு  பொறுப்பேற்றுள்ளது. உலக அளவில் பல்வேறு நாடுகளில் இருந்து இந்த தாக்குதல் சம்பவத்திற்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது.

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள இசை நிகழ்ச்சி அரங்கில் எதிர்பாராதவிதமாக பயங்கர ஆயுதங்களுடன் நுழைந்த கும்பல் அங்கிருந்த மக்களை நோக்கி துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டது. இந்த கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 70 பேர் உயிரிழந்துள்ளனர். 140க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இதற்கு உலக தலைவர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில், பிரதமர் மோடி எக்ஸ் சமூக வலைதளத்தின் வாயிலாக இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். 'இந்த துயரமான நேரத்தில் ரஷ்ய கூட்டமைப்பின் அரசாங்கத்திற்கு இந்திய அரசும், இந்திய மக்களும் துணை நிற்போம்' எனத் தெரிவித்துள்ளார்.