லண்டனில் உள்ள அம்பேத்கர் மியூசியத்தை மூடுவதற்கு அந்நாட்டு அதிகாரிகள் முடிவெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

london ambedkar museum closure issue

Advertisment

Advertisment

1920ஆம் ஆண்டுகளில் அம்பேத்கர் மாணவராக இருந்த போது, அவர் லண்டன் நகரின் வடமேற்குப் பகுதியில் உள்ள கிங் ஹென்றி சாலையில் அமைந்திருக்கும் கட்டிடம் ஒன்றில் வசித்து வந்தார். அம்பேத்கர் நினைவாக இந்த கட்டிடத்தை வாங்கிய இந்திய அரசு கடந்த 2015 ஆம் ஆண்டு அம்பேத்கர் நினைவாக மியூசியம் ஒன்றை அமைத்தது.

4 தளங்கள் கொண்ட இந்த கட்டிடத்தில் அம்பேத்கர் சிலை, புகைக்கப்பட கண்காட்சி, நூலகம் ஆகியவை நிறுவப்பட்டு பொதுமக்கள் பார்வைக்காக கடந்த 2015 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். இந்த நிலையில் அம்பேத்கர் மியூசியத்தை பார்வையிட நிறைய பொதுமக்கள் வருவதால், தங்களுக்கு சிரமம் ஏற்படுகிறது என அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் புகார் தெரிவித்ததையடுத்து, இந்த முடிவுக்கு வந்துள்ளதாக லண்டன் அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்நிலையில் மகாராஷ்டிர அரசு சார்பில் லண்டன் அதிகாரிகளின் முடிவுக்கு எதிராக இங்கிலாந்து அரசிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.