Skip to main content

உலக புகழ்பெற்ற ‘கபோசு’ நாய் மரணம்; இணையவாசிகள் சோகம்!

Published on 25/05/2024 | Edited on 25/05/2024
kabosu dog passed away

உலக புகழ்பெற்ற மீம்ஸ் நாயாகப் பலரின் கவனத்தைப் பெற்ற கபோசு உடல்நலக்குறைவால் உயிரிழந்தது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2008 ஆம் ஆண்டு இந்த நாயை ஜப்பானைச் சேர்ந்த ஒருவர் தத்தெடுத்து வளர்த்து வந்துள்ளார். அப்போது,  2010 ஆம் ஆண்டு கபோசு நாயை வைத்து விதவிதமாக போட்டோ ஷூட் எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டது. இந்தப் புகைப்படம் இணையதளவாசிகளை வெகுவாக கவர்ந்தது மட்டுமல்லாமல், அந்தக் கபோசு நாயின் ரியாக்ஸன்கள் அனைத்தும் உலகம் முழுவதும் மீம் டெம்ப்லேட்டுகளாக மாறி பலரையும் ரசிக்கும்படி வைத்தது. 

kabosu dog passed away

இதனைத் தொடர்ந்து, கடந்த 2013ஆம் ஆண்டில் கபோசுவின் புகைப்படத்தைப் பயன்படுத்தி  கிரிப்டோகரன்சியான Dogecoin ஐ உருவாக்கவும் தூண்டியது. மேலும் எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை தன் வசப்படுத்திய பிறகு அதன் குருவி லோகோவை மாற்றி கபோசுவின் புகைப்படத்தை வைத்தார். பின்னர்தான் ட்விட்டர் எக்ஸ் நிறுவனமாக மாறியதும் வேறு புகைப்படம் மாற்றப்பட்டது.

இந்த நிலையில்தான் நேற்று(24.5.2024) காலை உடல்நலக்குறைவால் தன்னுடைய 18 வயதில் கபோசு நாய் உயிரிழந்துள்ளது. கபோசு நாய் உயிரிழந்தது உலகம் முழுவதும் உள்ள அதன் ரசிகர்களைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

சார்ந்த செய்திகள்

 

Next Story

தெருநாய்கள் கடித்து சிறுமி படுகாயம்!

Published on 22/06/2024 | Edited on 22/06/2024
Tenkasi District Achanputur 12th Street dog incident
மாதிரிப்படம்

தெருநாய்கள் கடித்ததில் சிறுமி ஒருவர் படுகாயம் அடைந்த சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம் அச்சன்புதூர் 12வது தெருவில் காளிராஜ் என்பவர் வசித்து வருகிறார். கூலி தொழிலாளியான இவருக்கு எட்டு வயதில் மனிஷா என்ற மகள் உள்ளார். இந்தச் சிறுமி அங்குள்ள பள்ளி ஒன்றில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் இன்று (22.06.2024) காலை 10க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் கடித்ததில் சிறுமி மனிஷாவைக் கடித்துள்ளன.

இதனைக் கண்ட சிறுமியின் உறவினர் ஒருவர் சிறுமியை மீட்டுள்ளார். இருப்பினும் நாய் கடித்ததில் படுகாயமடைந்த மனிஷா தென்காசி அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கெனவே இப்பகுதியில் தெருநாய்களைக் கட்டுப்படுத்த பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என மக்கள் தங்களது ஆதங்கத்தை தெரிவித்துள்ளனர். 

Next Story

சாமி கும்பிடச் சென்ற பெண்ணை கடித்துக் குதறிய நாய்; மருத்துவமனையில் தீவிர சிகிச்சை! 

Published on 18/06/2024 | Edited on 18/06/2024
dog that bit the woman Sami went to worship

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கொண்ட சமுத்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட குறிஞ்சி நகர் பகுதியைச் சேர்ந்த கல்பனா( 48). அவர் அதே பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காகச் சென்றுள்ளார். அப்பொழுது கோயில் வளாகத்தில் படுத்திருந்த நாய் ஒன்று திடீரென கல்பனாவை ஓடிவந்து கடித்துள்ளது. இதில் அவர் அலறி  கூச்சலிட்டும் விடாமல் கை, கால் உள்ளிட்ட இடங்களில் நாய் கடித்துக் குதறியது. இவரின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் நாயை துரத்தி விட்டனர்.

இதனையடுத்து 108 ஆம்புலன்ஸ் மூலம் குடியாத்தம் தலைமை அரசு மருத்துவமனைக்கு கல்பனாவை அனுப்பி வைத்தனர். மேலும் அங்கு கல்பனாவுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். கொண்டசமுத்திரம் ஊராட்சி பகுதியில் அதிக அளவிலான தெரு நாய்கள் சுற்றுவதாகவும் இதை கட்டுப்படுத்த ஊராட்சி மன்ற நிர்வாகம் மற்றும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

தமிழ்நாடு முழுவதுமே தெருநாய்கள் பொதுமக்களை குறிப்பாக சிறார்களை பெண்களையும் கடித்து குதறுவது தொடர் கதையாகவே இருந்து வருகிறது அரசு இதில் கவனம் செலுத்தி நாய்களுக்கு தடுப்பூசியும் குடும்ப கட்டுப்பாடு ஆபரேஷன் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.