japan pm

ஜப்பான் நாட்டின் பிரதமராக இருந்துவந்தஷின்சோ அபே, கடந்த ஆண்டு உடல்நிலையைக் காரணம் காட்டி பதவி விலகினார்.யோஷிஹிதே சுகா புதிய பிரதமராக பதவியேற்றார். இந்தநிலையில், யோஷிஹிதே சுகா தலைமையிலான அரசு கரோனா தொற்று பரவலைக் கையாண்ட விதம் குறித்து ஜப்பான் மக்களிடையே கடும் அதிருப்தி எழுந்துள்ளது.

Advertisment

கரோனாபரவலுக்கு மத்தியில் ஒலிம்பிக் போட்டிகளைநடத்தியதற்கும்பெரும்பாலான ஜப்பான் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்தநிலையில் யோஷிஹிதே சுகா, இம்மாத இறுதியில் நடைபெறவுள்ள தனது கட்சியின் தலைவர் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என அறிவித்துள்ளார். தனதுஅரசு மீதான மக்களின் அதிருப்தியைக் கருத்தில் கொண்டே அவர் இந்த முடிவை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

Advertisment

யோஷிஹிதே சுகா தற்போது ஆட்சியில் உள்ள சுதந்திர ஜனநாயக கட்சியைச் சேர்ந்தவர். ஜப்பானில் இந்த ஆண்டு பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், சுதந்திர ஜனநாயக கட்சி ஜப்பான் நாடாளுமன்றத்தில் ஆதிக்கம் செலுத்திவருகிறது. எனவே அக்கட்சியின் தலைவராக இருப்பவரே பிரதமராக தேர்தெடுக்கப்படுவார்என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கட்சித் தலைவர் பதவிக்குப் போட்டியிடாதது மூலம் யோஷிஹிதே சுகா பிரதமர் பதவியைத் துறப்பதாக கருதப்படுகிறது.