Skip to main content

பிரமிடு மீது ஏறிய யூடியூப் பிரபலத்துக்கு ஐந்து நாட்கள் சிறை தண்டனை விதிப்பு!

Published on 22/01/2020 | Edited on 22/01/2020

எகிப்து பிரமிடு மீது ஏறிய பிரபல நபருக்கு 5 நாட்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவை சேர்ந்தவர் விட்டலி ஸ்டோ. இவர் பிரபலமான யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். இவரை இன்ஸ்டாகிராம், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் லட்சக்கணக்கான மக்கள் இவரை பின்தொடர்ந்து வருகிறார்கள். இவர் தன்னுடைய அதீத சாசக திறமையால் சமூக வலைதளங்களில் பிரபலமாக இருந்து வருகிறார். சமீபத்தில் எகிப்து என்ற இவர் அங்குள்ள பிரமிடு மீது ஏறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பாதுகாப்பு அதிகாரிகள் அவரை கைது செய்தனர். அவருக்கு 5 நாள் சிறை தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது. இதை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ள அவர், நான் எகிப்து நாட்டை அவமதிக்கும் எண்ணத்தில் அவ்வாறு செய்யவில்லை. விழிப்புணர்வு ஏற்படுத்தவே நான் அவ்வாறு சென்றேன் என்று தெரிவித்துள்ளார்.
 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

விஜிலென்ஸ் கொடுத்த புகார்; மீண்டும் வழக்கில் சிக்கிய டி.டி.எஃப்.வாசன்

Published on 15/07/2024 | Edited on 15/07/2024
nn

திருப்பதியில் டி.டி.எஃப்.வாசன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

பிரபல யூடியூபர் டி.டி.எஃப்.வாசன் அடிக்கடி பைக் சாகசங்கள் செய்து வழக்குகளில் சிக்குபவர். ஏற்கனவே காஞ்சிபுரம் பகுதியில் ஆபத்தான முறையில் இருசக்கர வாகனத்தை செலுத்தி விபத்தை ஏற்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்டு பல நாட்கள் சிறையில் இருந்த டி.டி.எஃப்.வாசன் வெளியே வந்திருந்தார். அதனைத் தொடர்ந்து அண்மையில் சென்னையிலிருந்து திருச்செந்தூர் நோக்கி நண்பர்களுடன் சென்ற டி.டி.எஃப். வாசன், மதுரை வண்டியூர் சுங்கச்சாவடி அருகே செல்போனில் பேசியபடியே காரை இயக்கிய வீடியோவை யூடியூப் சேனலில் பதிவிட்டதாக புகார்கள் எழுந்தது. தொடர்ந்து மதுரை அண்ணா நகர் காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்திருந்தனர்.

இந்நிலையில் திருப்பதி தேவஸ்தான விஜிலென்ஸ் துறை அளித்த புகாரின் பேரில் டி.டி.எஃப். வாசன் மீது மீண்டும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திருப்பதியில் சாமி தரிசனம் செய்ய சென்ற போது பிராங்க் வீடியோ எடுத்து அதை  டி.டி.எஃப். வாசன் வெளியிட்டதாக புகார் கொடுக்கப்பட்ட நிலையில் தற்போது தேவஸ்தான விஜிலென்ஸ் துறை கொடுத்த புகாரின் பேரில் டி.டி.எஃப்.வாசன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதோடு போலீஸ் சம்மனும் அனுப்பப்பட்டுள்ளது.

Next Story

வி.ஜே. சித்து மீது புகார்; காவல்துறை விளக்கம்!

Published on 31/05/2024 | Edited on 31/05/2024
Police explanation for Complaint against VJ Sidhu

பிரபல யூடியூபர் வி.ஜே. சித்துவுக்கு எதிராக சென்னை போக்குவரத்து கூடுதல் காவல் ஆணையர் அலுவலகத்தில் கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த ஷெரின் என்பவர் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில், “நான் இன்று காலை ஏழுமணி அளவில் யூடியூபில் விஜே சித்து விலாக்ஸ் (VJ Siddhu vlogs) சேனலில் ஒரு வீடியோ ஒன்றைப் பார்த்தேன். அதில் விஜே சித்து போக்குவரத்து விதிகளை மதிக்காமலும் அஜாக்கிரக்கிதையாகவும் செல்போனில் பேசியபடி வாகனத்தை ஏர்போர்ட் மீனம்பாக்கம் ரோட்டில் ஓட்டிக்கொண்டும் அதனை யூட்யூப்பிலும் பதிவேற்றம் செய்தும் உள்ளார். இதைப் பார்த்து மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் தவறான வழியில் செல்ல வழிவகுக்கும்.

அது மட்டுமல்லால் அவருடைய வீடியோவில் ஆபாசமான வார்த்தைகளையும் இரட்டை அர்த்த வசனங்களையும் பேசி உள்ளார். இது குழந்தைகள், மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடையே தவறாக பேசும் பழக்கத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது. எனவே அவர் மீது செல்போனில் பேசியபடி வாகனத்தை ஒட்டிக்கொண்டு போக்குவரத்து விதிகள் மற்றும் சட்டவிதிகளை மீறியதற்காக தக்க நடவடிக்கைகள் எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்திருந்தார். 

Police explanation for Complaint against VJ Sidhu

இந்நிலையில் இந்தப் புகார் குறித்து சென்னை பெருநகர காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. அதில், “யூடியூபர் வி.ஜே. சித்துவுக்கு எதிரான புகார் தொடர்பாக ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இந்தப் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ள வீடியோ கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 12 ஆம் தேதியில் (12.11.2023) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

- படம் : எஸ்.பி. சுந்தர்