Skip to main content

ட்ரம்பின் தலைக்கு 80,000 மில்லியன் டாலர் பரிசு தொகை அறிவித்த ஈரான் அரசு!

Published on 06/01/2020 | Edited on 06/01/2020

சில தினங்களுக்கும முன்பு ஈராக் தலைநகர் பாக்தாத் விமான நிலையம் அருகே அமெரிக்க ராணுவத்தின் ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில், ஈரான் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் தளபதி குவாசிம் சுலைமான், ஈராக்கின் ஹஸ் அல் ஷபாபி துணை ராணுவப்படையின் துணைத் தலைவர் அபு மஹதி அல் முஹன்திஸும் ஆகியோர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் உலக அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் நேற்று முன்தினம் கொல்லப்பட்ட சுலைமானின் இறுதி சடங்கு நடைபெற்றது.



இந்நிலையில், இந்த விவகாரத்தில் ஈரான் அரசுக்கும் அமெரிக்க அரசுக்கும் பெரிய கருத்து மோதல் ஏற்பட்டது. தேவைப்பட்டால் ஈரானை தாக்கவும் செய்வோம் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்திருந்தார். இந்நிலையில், அமெரிக்க அதிபரின் தலையை கொண்டு வருபவருக்கு 80,000 மில்லியன் டாலர் பரிசு தொகை வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஈரானில் தற்போது  80 மில்லியன் பேர் வாழ்ந்து வருவதை அடிப்படையாக கொண்டு இந்த தொகை நிர்ணயிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.
 

 

சார்ந்த செய்திகள்