Skip to main content

அமெரிக்க அதிபர் தேர்தலில் இந்திய இளைஞர்!

Published on 22/02/2023 | Edited on 22/02/2023

 

Indian in US presidential election!

 

அமெரிக்காவில் கடந்த 2020 ஆம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியை சேர்ந்த வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்று அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்றார். நான்கு ஆண்டுகள் கொண்ட அமெரிக்க அதிபரின் பதவிக்காலம் அடுத்த ஆண்டுடன் முடிவடைகிறது 

 

2024ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்தத் தேர்தலில் ஜனநாயகக் கட்சியை சேர்ந்த தற்போதைய அதிபர் ஜோ பைடன் மீண்டும் போட்டியிட உள்ளார். அவரை எதிர்த்து குடியரசுக் கட்சியை சேர்ந்தவரும், முன்னாள் அதிபருமான டொனால்ட் டிரம்ப் போட்டியிடுவார் என கடந்த சில தினங்களுக்கு முன் கூறப்பட்டு வந்தது. இதற்கான ஆதரவுகளையும் டிரம்ப் திரட்ட ஆரம்பித்துவிட்டார்.

 

இதனிடையே, குடியரசுக் கட்சியில் நிர்வாகியாக உள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நிக்கி ஹாலேவும் அதிபர் பதவிக்கான வேட்பாளராகப் போட்டியிட விருப்பமனுவைத் தாக்கல் செய்துள்ளார். அரசியல் பயணத்தில் தனது சாதனைகள் குறித்து காணொலி ஒன்றையும் வெளியிட்டுள்ளார். 

 

இந்த நிலையில், இந்த அதிபர் தேர்தலில் அதே குடியரசுக் கட்சியில் உள்ள அமெரிக்காவில் வாழும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரான விவேக் ராமசாமியும் போட்டியிடுவதற்காக விருப்பமனுவைத் தாக்கல் செய்துள்ளார். 37 வயதான விவேக் ராமசாமி ஒரு தொழிலதிபர். 

 

கேரள மாநிலம் வடக்கஞ்சேரியை சேர்ந்த விவேக் ராமசாமியின் தந்தை எலக்ட்ரிக் இன்ஜினியர். தாயார் மனநல மருத்துவர். அமெரிக்காவின் ஒகியோ மாகாணத்தில் பிறந்த விவேக் ராமசாமி, தற்போது குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்பமனுவை தாக்கல் செய்துள்ளார். இவர் சில தொழில் நிறுவனங்களை நடத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.

 

குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர்களே டிரம்பிற்கு எதிராக விருப்பமனுக்களைத் தாக்கல் செய்துள்ளது குழப்பத்தையும், முன்னாள் அதிபர் ட்ரம்பிற்கு பெரும் சிக்கலையும் ஏற்படுத்தியுள்ளது.

 


 

சார்ந்த செய்திகள்

 

Next Story

'இதுவே கட்சிக்கும் நாட்டுக்கும் நல்லது'-அதிர்ச்சி கொடுத்த ஜோ பைடன்

Published on 21/07/2024 | Edited on 21/07/2024
 'I hope this is good for the party and the country' - shocked Joe Biden

இந்தாண்டு நவம்பர் மாதத்தில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்தத் தேர்தலில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த தற்போதைய அதிபர் ஜோ பைடனும், அவரை எதிர்த்து குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவரும், முன்னாள் அதிபருமான டொனால்ட் டிரம்ப் போட்டியிட உள்ளதாக இருந்தது. இந்நிலையில் அதிபர் தேர்தலிலிருந்து விலகுவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தற்போது அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அமெரிக்காவில் அதிபர் தேர்தலுக்கான பரப்புரைகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தலிலிருந்து விலகுவதாகவும், மீண்டும் தேர்தலில் போட்டியிட மாட்டேன் எனவும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். 'மிஞ்சியிருக்கும் தனது பதவி காலம் முழுவதும் அதிபராக எனது கடமைகளை நிறைவேற்றுவேன்; இதுவே எனது கட்சிக்கும் நாட்டுக்கும் நல்லது என நம்புகிறேன்' என அறிக்கை வாயிலாக ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

Next Story

டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு; ஈரான் மீது அமெரிக்கா பரபரப்பு குற்றச்சாட்டு!

Published on 18/07/2024 | Edited on 18/07/2024
America's sensational accusation against Iran on Firing at Trump

இந்தாண்டு நவம்பர் மாதத்தில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்தத் தேர்தலில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த தற்போதைய அதிபர் ஜோ பைடன் மீண்டும் போட்டியிட உள்ளார். அவரை எதிர்த்து குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவரும், முன்னாள் அதிபருமான டொனால்ட் டிரம்ப் போட்டியிட உள்ளார். 

இந்த நிலையில், கடந்த 13ஆம் தேதி அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் பரப்புரையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த டிரம்ப் மீது திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இந்த துப்பாக்கிச்சூட்டில், துப்பாக்கி குண்டு டிரம்பின் வலது காதை கிழித்து சென்றது. இதனால், அவர் நூலிழையில் உயிர் தப்பினார். டிரம்ப்பை துப்பாக்கியால் சுட்ட தாமஸ் மேத்யூ என்ற இளைஞரை சம்பவ இடத்திலேயே போலீசார் சுட்டத்திக் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. டிரம்ப் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில், டிரம்பை கொலை செய்ய ஈரான் சதி திட்டம் தீட்டியுள்ளதாக அமெரிக்க உளவுத்துறை பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளது.  கடந்த 2020 ஆம் ஆண்டின் அமெரிக்க அதிபராக இருந்த டிரம்பின் உத்தரவால், அண்டை நாடான ஈராக்கில் அமெரிக்கா நடத்திய தாக்குதலில், ஈரான் ராணுவத் தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டார். அதற்கு பழிவாங்குவதாக டிரம்பை கொலை செய்ய ஈரான் சதி செய்து வருவதாக அமெரிக்க உளவுத்துறை தெரிவித்துள்ளது. ஆனால், அமெரிக்காவின் இந்தக் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என ஈரான் திட்டவட்டமாக கூறியுள்ளது. மேலும், டிரம்ப் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துக்கும், தங்களுக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை என்று ஈரான் விளக்கம் அளித்துள்ளது.