Skip to main content

இணைய சேவையில் இந்தியாவுக்கு 47-வது இடம்... முதல் இடம் அமெரிக்கா அல்ல...!

Published on 27/02/2019 | Edited on 27/02/2019

பொருளாதார நுண்ணறிவு பிரிவு, சமீபத்தில் ஃபேஸ்புக் நிறுவனத்தின் தலைமையில் நடத்திய ஆய்வில், இணைய சேவையில் இந்தியா 47-வது இடத்தில் இருக்கிறது. முதலிடத்தில் ஸ்வீடன் இருக்கிறது. அதற்கடுத்தடுத்த இடங்களில் சிங்கப்பூர் மற்றும் அமெரிக்கா இருக்கிறது. 

 

internet


இந்த ஆய்வில் பெண்களைவிட ஆண்களே அதிகமாக இணைய சேவையை பயன்படுத்துகிறார்கள் எனவும் தெரியவந்துள்ளது. நடுத்தர வருவாய் கொண்ட நாடுகளில் 66% 4ஜி இணைய சேவை அதிகரித்துள்ளதாகவும், குறைந்த வருவாய்கொண்ட நாடுகளில் இது 22% அதிகரித்துள்ளதாகவும் அந்த ஆய்வு தெரிவித்துள்ளது. மேலும் வீடுகளில் பயன்படுத்தும் இணைய சேவையை பெறுவதில் 2018-ம் ஆண்டில் 7.7 சதவீதமாக இருந்திருக்கிறது. அதுவே 2019-ல் 2.9 சதவீதமாக குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விவசாயிகள் போராட்டம்; இணைய சேவை துண்டிப்பு!

Published on 10/02/2024 | Edited on 10/02/2024
nternet service outage Farmers protest at haryana

ஹரியானா மாநிலத்தில் முதல்வர் மனோகர் லால் கத்தார் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், மத்திய அரசு அனைத்து பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்யும் வகையில் சட்டம் கொண்டு வர வேண்டும் என்று அங்குள்ள விவசாயிகள் பல ஆண்டுகளாகக் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால் மத்திய அரசு இதற்கு எந்தவித நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது 

அதனால், அனைத்துப் பயிர்களுக்கும் மத்திய அரசு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்யும் சட்டம் கொண்டுவர வேண்டும் உட்படப் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சில தினங்களுக்கு முன்பு டெல்லியில் விவசாய சங்கத்தினர் முற்றுகை போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். 

விவசாய சங்கத்தினர், மத்திய அரசுக்கு எதிராக டெல்லியில் முற்றுகைப் போராட்டத்தை வரும் பிப்ரவரி 13 ஆம் தேதி அன்று மேற்கொள்ள நாளை (11-02-24) முதல் ஹரியானாவில் இருந்து ஊர்வலமாகப் புறப்பட்டுச் செல்ல உள்ளனர்.

இந்த நிலையில், ஹரியானா முதல்வர் மனோகர் லால் கத்தார் அந்த மாநிலத்தில் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளார். அதன்படி, நாளை (11-02-24) முதல் வரும் 13 ஆம் தேதி வரை ஹரியானாவில் ஏழு மாவட்டங்களுக்கு இணைய வழி சேவையை துண்டிக்க உத்தரவிட்டுள்ளார். அதில், அம்பாலா, குருசேத்ரா, கைதால், ஜிந்த், ஹிசார், பதேஹாபாத், சிர்சா ஆகிய மாவட்டங்களில் இணைய சேவைகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், செல்போனில் பேசுவதற்கான அழைப்புகளைத் தவிர இதர இணைய சேவைகளுக்கு வரும் 13 ஆம் தேதி காலை 6:00 மணி முதல் 13 ஆம் தேதி இரவு 11:59 மணி வரை அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மணிப்பூரில் இணையதள சேவை தடை நீட்டிப்பு

Published on 01/10/2023 | Edited on 01/10/2023

 

Extension of internet service ban in Manipur 

 

மணிப்பூர் மாநிலத்தில் முதல்வர் பைரங் சிங் தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் பெரும்பான்மை சமூகமாக உள்ள மைத்தேயி சமூகத்தினர், தங்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து சலுகைகள் வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதனால், பழங்குடியின மக்களான குக்கி மற்றும் நாகா மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கடந்த மே மாதம் 3ம் தேதி ஒருங்கிணைந்த பழங்குடியின மாணவர் அமைப்பு அந்த மாநிலத்தில் பேரணி நடத்தினர். இந்தப் பேரணியில் வன்முறை வெடித்தது. இந்த கலவரத்தில் 150க்கும் மேற்பட்டோர் பலியாகினார்கள். மேலும், 60,000க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்தனர்.

 

அதே சமயம் மணிப்பூர் முழுவதும் வன்முறை பரவுவதற்கு சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் பொய்யான தகவல்களும், வதந்திகளும் காரணம் எனக் கூறி கடந்த மே மாதம் 23 ஆம் தேதி முதல் இணைய சேவையை அம்மாநில அரசு முடக்கியது. மேலும், அதில் அரசு ஒப்புதல் பெறப்பட்ட எண்களைத் தவிர்த்து அனைத்து மொபைல்களிலும் இணைய சேவை முடக்கப்பட்டது. இதையடுத்து 4 மாதங்களுக்குப் பிறகு கலவரம் குறைந்த பகுதிகளில் கடந்த 23 ஆம் தேதி முதல் இணைய சேவை வழங்கப்பட்டது. இந்த சூழலில் கடந்த ஜூலை மாதம் காணாமல் போன இரு மாணவர்களின் சடலங்களின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியானதால் மீண்டும் பதற்றம் உருவாகி இருந்தது.

 

இதனைத் தொடர்ந்து கடந்த 27 ஆம் தேதி முதல் அக்டோபர் 1 ஆம் தேதி வரை என 5 நாட்களுக்கு மீண்டும் இணைய சேவை தடை செய்யப்பட்டது. இந்தத் தடை உத்தரவு இன்று இரவுடன் முடியவுள்ள நிலையில், மணிப்பூரில் இணையதள சேவைகளுக்கு விதிக்கப்பட்ட தடை மேலும் 5 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி நாளை முதல் அக்டோபர் 6 ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு மணிப்பூர் மாநிலத்தில் இணையதள சேவைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.