Skip to main content

”தேர்தல் முறையாக நடந்திருந்தால் இம்ரான் கான் வெற்றி பெற்றிருக்க முடியாது”-இம்ரான் கான் முன்னாள் மனைவி

Published on 30/07/2018 | Edited on 30/07/2018
reham khan

 

சமீபத்தில் நடந்து முடிந்த பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தலில் 115 இடங்களில் வெற்றிபெற்று தனிப்பெரும் கட்சியாக இருக்கிறது, முன்னாள் கிரிக்கெட் வீரரான இம்ரான் கானின் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி. இருந்தாலும் தேவையான எம்பிக்களை வைத்து பெரும்பான்மையை பெற அக்கட்சி முய்ற்சியில் ஈடுபட்டுள்ளது.

 

இந்நிலையில், இம்ரான் கானின் முன்னாள் மனைவியும் பத்திரிகையளருமான ரேஹம் கான், இந்திய நாளிதழ் ஒன்றுக்கு அளித்த் பேட்டியில்,” பாகிஸ்தான் தேர்தல் முடிவுகள் இப்படித்தான் இருக்கும் என்பது எனக்கு முன் கூட்டியே தெரியும். தேர்தல் முறையாகவும், நியாயமாகவும் நடந்திருந்தால் இம்ரான் வெற்றி பெற்றிருக்க முடியாது. தற்போதைய சூழ்நிலையில், பாகிஸ்தான் ராணுவத்தால் ஆட்டி வைக்கப்படும் தலையாட்டி பொம்மையாகத்தான் இம்ரான் கான் இருப்பார் என்றும், ராணுவ சொல்படிதான் இம்ரான் கான் நடந்தாக வேண்டும் என்று கூறியுள்ளார்.

சார்ந்த செய்திகள்