Skip to main content

பாகிஸ்தானின் அடுத்த பிரதமர் ஆகிறார் இம்ரான் கான்?!

Published on 26/07/2018 | Edited on 26/07/2018

 

pak

 

 

 

பாகிஸ்தானில் நேற்று (ஜூலை-25) நாடாளுமன்ற தேர்தலும் பஞ்சாப், சிந்து, கைபர் பக்துங்வா, பலுசிஸ்தான் மாகாண சட்டசபை தேர்தலும் ஒரே நேரத்தில் நடைபெற்றது. இந்த தேர்தலில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் இம்ரான்கானின் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ள நிலையில் அந்த கட்சியின் தலைவர் இம்ரான்கான்தான் அடுத்த பிதாமர் என கூறப்படுகிறது.

 

கடந்த ஜூலை 14-ஆம் தேதியே பாகிஸ்தானில் தென்மேற்கு பகுதியில் பலுகிஸ்தானில் அவாமி கட்சியின் தேர்தல் பிரச்சாரம் நடந்துகொண்டிருந்த நேரத்தில் அங்கு கூட்டத்தில் புகுந்த மனித வெடிகுண்டு வெடித்து 70 பேர் சம்பவ இடத்தியிலேயே பலியாகினர். மேலும் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களில் 54 பேர் தொடர்ந்து பலியாகி பலி எண்ணிக்கை 124 ஆக இருந்தது. இறுதியில் பலி எண்ணிக்கை 133-ஐ தொட்டது இப்படி தேர்தலுக்கு முன்னரே பல தீவிரவாத சம்பவங்கள் நடைபெற்று பரபரப்பாக்கியது.

 

 

 

இதன் காரணமாக சுமார் 85 ஆயிரம் வாக்கு சாவடிகளில் மொத்தம் 3 லட்சத்து 70 ஆயிரம் பாதுகாப்பு வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பாகிஸ்தானில் தேர்தல் பாதுகாப்பிற்காக இவ்வளவு அதிக ராணுவ வீர்கள் குவிட்கப்பட்டது இதுதான் முதல்முறை இவ்வளவு பாதுகாப்பிற்கு பிறகும் பலுசிஸ்த்தான் வாக்குச்சாவடியில் தேர்தல் வாக்கெடுப்பின் பொழுது நிகழ்ந்த பயங்கர குண்டுவெடிப்பில் 25 பேர் பலியாகி 30-க்கும் மேற்ப்பட்டோர் காயமடைந்தனர்.  

 

 

 

இந்தநிலையில், மொத்தம் 272 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் சட்டமன்ற தொகுதிளுக்கும் தேர்தல் முடிந்தபின் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. தனி பெருபான்மைக்கு 130 இடங்கள் தேவை என்ற போதில் 119 இடங்களில் இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி முன்னிலையில் இருந்துவருகிறது. ஆனால் ஆரம்பத்தில் ஏற்பட்டதொழில்நுட்ப கோளாறு காரணமாக தேர்தல் முடிவுகள் வெளியிடுவது தாமதமானது. பிறகு வெளியிடப்பட்ட முடிவுகளில் தொடர்ந்து இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி பல இடங்களில் முன்னிலை வகித்துள்ளது.  அக்கட்சி 119 இடங்களிலும், நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் 56 இடங்களிலும், பிலாவல் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி 34 இடங்களிலும் முன்னிலையில் இருக்கின்றன. இஸ்லாமாபாத் தொகுதியில் நின்ற இம்ரான்கான்  92 ஆயிரத்து 891 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.

 

இதனால் இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியே ஆட்சியை பிடிக்க போவது உறுதி அடுத்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்தான் என அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

சார்ந்த செய்திகள்

Next Story

ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமராக்கள் செயலிழப்பு; நீலகிரியில் பரபரப்பு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Malfunction of strong room CCTV cameras; Excitement in the Nilgiris

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.
 

தமிழகத்தில் தேர்தல் மக்களவை தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் வாக்கு பெட்டிகள் அனைத்தும் ஸ்ட்ராங் ரூம் எனப்படும் ஐந்து அடுக்கு பாதுகாப்பு அறைக்குள் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நீலகிரியில் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் திடீரென செயலிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நீலகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது. 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அருகிலுள்ள அறையிலிருந்து கண்காணிப்பதற்காக அனைத்து அரசியல் கட்சியினருக்கும் பொதுவாக ஒரு அறை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இன்று மாலை திடீரென 173 சிசிடிவி கேமராக்கள் செயலிழந்தது. பின்னர் சுமார்  20 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் சிசிடிவி கேமராக்கள் வழக்கம் போல் செயல்பட தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்திருக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் சிசிடிவி காட்சிகள் திடீரென செயலிழந்தது அரசியல் கட்சியினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நீலகிரியில் திமுக சார்பில் ஆ.ராசாவும், அதிமுக கூட்டணி சார்பில் லோகேஷ் தமிழ்ச்செல்வனும், பாஜக கூட்டணியில் எல்.முருகனும், நாம் தமிழர் கட்சி சார்பாக ஜெயக்குமாரும் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Next Story

'பாஜகவின் செயலை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து 

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 'Our people are watching the work of the BJP' - Chief Minister M. K. Stalin's opinion

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் 'நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது' என பாஜக அரசு தமிழகத்தை வஞ்சிப்பதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் 'மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளப் பாதிப்புகளுக்கான நிவாரணமாகத் தமிழ்நாடு கோரியது 37,907 கோடி ரூபாய். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணமாகவும், உட்கட்டமைப்புகளை மறுசீரமைக்கவும் தமிழ்நாடு அரசு மாநிலப் பேரிடர் நிதியில் இருந்து இதுவரை செலவு செய்துள்ளது 2,477 கோடி ரூபாய்.

ஆனால், ஒன்றிய பா.ஜ.க அரசு தற்போது அறிவித்திருப்பதோ வெறும் 276 கோடி ரூபாய். இதுவும் நாம் உச்சநீதிமன்றத்தை நாடிய பிறகே அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசின் ஒவ்வொரு செயலையும் நம் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்!' எனத் தெரிவித்துள்ளார்.