g

இளைஞரின் வயிற்றில் இருந்து சீன மருத்துவர்கள் இறந்த மீனை எடுத்துள்ள சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் குவாங்டன் மாகாணத்தை சேர்ந்த 30 வயதான இளைஞர் ஒருவருக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. அதிகப்படியான வயிற்று வலி காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படார். அவருக்கு அங்கு எக்ஸ் ரே எடுத்து பார்த்ததில் மருத்துவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

Advertisment

Advertisment

அவரது வயிற்றில் மீன் ஒன்று இறந்த நிலையில் முழு உடலோடு இருந்துள்ளது. இதுதொடர்பாக அவரிடம் விசாரித்ததில், திலபியா என்னும் வகையை சேர்ந்த ஒரு வகையான மீன் அவரின் பின்புறம் வழியாக மலக்குடலுக்கு சென்றுள்ளதை கண்டறிந்துள்ளனர். இதனால் அவர் வலியில் துடித்துள்ளார். இறந்த மீன் அளவில் சற்று பெரிய அளவில் இருந்ததால் மருத்துவர்கள் அவருக்கு அறுவை சிகிச்சை செய்து மீனை வெளியே எடுத்துள்ளனர். இந்த சம்பவம் அந்நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.